வெள்ளிக்கிழமை அன்று கட்டாயம் செய்யக் கூடாதவை இவை..!!
1)வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாது. அதுவும் பெண்கள் வெள்ளிக்கிழமை அன்று ஒட்டடை அடிக்கவே கூடாது. இதனால் வீட்டில் கடன் பிரச்சனை ஏற்படும்.
2)வெள்ளிக்கிழமை பூஜை அறையை சுத்தம் செய்வது நல்லது. ஆனால் பூஜை பொருட்களை சுத்தம் செய்யவே கூடாது. வியாழக் கிழமை அன்றே நீங்கள் பூஜை பொருட்களை கழுவி சுத்தம் செய்து கொள்ளலாம். ஆனால் வீட்டை துடைக்கக் கூடாது.
3)வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் அழுக்குத் துணிகளை சேர்த்து வைத்திருக்க கூடாது. அதேபோல் வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் துணி துவைக்க கூடாது. இதனால் வீட்டில் கடன் சுமை அதிகரிக்கும்.
4)வீட்டு பாத்ரூமை இந்த வெள்ளிக்கிழமை அன்று சுத்தம் செய்யக் கூடாது. அதேபோல் சமையலறை அலமாரியில் போடப்பட்டு இருக்கும் பேப்பர்களை இந்த நாளில் மாற்றக் கூடாது.
5)வெள்ளிக்கிழமை அன்று அடுப்பை துடைக்க கூடாது. இவ்வாறு செய்வதால் வீட்டில் கடன் சுமை அதிகரிக்கும்.
6)வெள்ளிக்கிழமையில் பணப்பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்யக் கூடாது. அதேபோல் மற்றவர்களுக்கு கடனாகவும் கொடுக்க கூடாது. இதனால் வீட்டில் லட்சுமி கடாச்சம் நீங்கி விடும். தங்க நகையும் கடனாக கொடுக்கக் கூடாது.
7)வெள்ளிக்கிழமை அன்று வாசலில் ரங்கோலி கோலம் தான் போடா வேண்டும். புள்ளி வைத்து கோலம் போடாக் கூடாது.
8)வெள்ளிக்கிழமை அன்று ஆண்கள் எண்ணெய் வைத்து தலைக்கு குளிக்க கூடாது. இவ்வாறு செய்தால் உடல்நலக் கோளாறு ஏற்படும்.
9)வெள்ளிகிழமாரி அன்று நெல்லிக்கனி உண்பதை தவிர்க்க வேண்டும். உப்பு, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி நிரப்பி வைக்கலாம். இதனால் அன்னத்திற்கு பஞ்சம் ஏற்படாது.
10)வெள்ளிக்கிழமை அன்று முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாது. அதேபோல் நகங்களை இந்த நாளில் வெட்டக் கூடாது.