வீடு தேடும் போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை!

Photo of author

By Divya

வீடு தேடும் போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை!

1)வடைக்கு வீடு தேடினாலும் சரி, சொந்த வீடு வாங்க நினைத்தாலும் சரி நீங்கள் பார்க்கும் வீடு முச்சந்தி வீடாக இருக்கக் கூடாது.

2)வீட்டிற்கு எதிரில் தெருக்கள் இருக்கக் கூடாது. அதாவது வீட்டிற்கு எதிரில் வலது, இடது பக்கங்களில் தெருக்கள் மூன்றும் ஒன்று சேர்ந்தவாறு இருக்கக் கூடாது.

3)தெரு வாசலின் உயரத்தை விட உள் வாசலின் உயரம் குறைவாக இருக்கக் கூடாது. ஒருபடி இறங்கி செல்லக் கூடாது. ஒரு படி ஏறி தான் செல்ல வேண்டும்.

4)எதிர்வீட்டு நிலைவாசல் நம் வீட்டு நிலைவாசலுக்கு நேராக இருக்கக் கூடாது.

5)வீட்டின் கழிவறை தென்மேற்கு, வடகிழக்கு மூலையில் இருக்கக் கூடாது.

6)வீட்டின் எதிரே காய்ந்த, பட்டு போன மரம் இருக்கக் கூடாது.

7)வீட்டின் முன்புறம் முருங்கை மரம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் தேவை இல்லாத பிரச்சனைகள் எழும். பண விரையம் ஏற்படும்.

8)வீட்டு பூஜை அறை வடகிழக்கு திசையில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

9)வீட்டு படுக்கை அறை தெற்கு அல்லது மேற்கு திசையில் இருப்பது நல்லது.