இவர்கள் இருவரும் தான் காரணம்!! பேஸ்புக்கில் பதிவு செய்துவிட்டு விபரீத முடிவை மேற்கொண்ட நபர்!!

இவர்கள் இருவரும் தான் காரணம்!! பேஸ்புக்கில் பதிவு செய்துவிட்டு விபரீத முடிவை மேற்கொண்ட நபர்!!

தனது இந்த விபரீத முடிவுக்கு தனது மனைவியும், பெண் தோழியும் தான் முழு காரணம் என்று நபர் ஒருவர் பேஸ்புக்கில் போஸ்ட் செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதயப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் 45 வயதான நபர் ஒருவர் தனது தற்கொலைக்கு தனது மனைவி மற்றும் பெண் தோழியின் தொல்லையே  முக்கிய காரணம் என்று பேஸ்புக்கில் போஸ்ட்   ஒன்று போட்டுவிட்டு  தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உதய்ப்பூர் மாவட்டத்தில் உள்ளூர்  பத்திரிகையாளராக பணியாற்றி வரும் பாரத் மிஸ்ரா என்ற நபர் நேற்று மாலை கோவர்தன் விலாஸ் காவல் நிலைய பகுதியில் உள்ள தனது பெண் தோழியான  பின்சி பரேரா என்பவரின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.நேற்று மதியம் அவருக்கும் அவரது தோழியான  பின்சிக்கும் இடையேயான செல்போன் உரையாடலின் போது   இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாலை அவர் சுட்டு  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பாரத் மிஸ்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் தனது பேஸ்புக்கில் தனது சாவிற்கு மனைவி கௌசல்யாவும், பெண் தோழி பின்சி  ஆகிய இருவரும்  குழப்பத்தை ஏற்படுத்தியதால் இந்த முடிவை மேற்கொண்டதாக போஸ்ட் செய்துள்ளார். இதையடுத்து பாரத் மிஸ்ராவின்  மரணத்திற்கு இரண்டு பெண்களும் காரணம் என போலீசார் கூறியுள்ளனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பாரத் மிஸ்ராவின் உடல் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.