இந்த இரண்டு பொருள் போதும் உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்புக்கு பாய் பாய் சொல்ல! உடனே ட்ரை பண்ணுங்க!

Photo of author

By Rupa

இந்த இரண்டு பொருள் போதும் உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்புக்கு பாய் பாய் சொல்ல! உடனே ட்ரை பண்ணுங்க!

Rupa

இந்த இரண்டு பொருள் போதும் உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்புக்கு பாய் பாய் சொல்ல! உடனே ட்ரை பண்ணுங்க!

ஒவ்வொருவருக்கும் அவரவர் உடல் அமைப்பிற்கு ஏற்ப சருமமும் மாறுபடும். வறண்ட சருமம், எப்பொழுதும் முகத்தில் எண்ணெய் வடியும் படி பிசுபிசுக்காக உள்ள சருமம், இரண்டும் கலந்தது போல் காம்பினேஷன் சருமம் போன்றவை காணப்படும். இதில் அதிக அளவு பாதிப்படைபவர்கள் யார் என்றால் எண்ணெய் பிசுக்கு உள்ள சருமமுடையவர்கள் தான். ஏனென்றால் இவர்களுக்கு ஒரு விதை எண்ணெய் முகத்தில் இருந்து கொண்டே இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் தினந்தோறும் இதனை பயன்படுத்தினால் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கும்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு சாறு -2 டீஸ்பூன்

முல்தானி மெட்டி- ஒரு ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு துணியால் அதில் இருக்கும் சாறை பிழிந்து எடுத்துக் கொள்ளலாம். அந்தச் சாறுடன் சிறிதளவு முல்தானி மெட்டி சேர்க்க வேண்டும். இரண்டையும் நன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடம் காய விட வேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி கொள்ளலாம். இவ்வாறு செய்து வர முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கும். அத்துடன் முகமும் பொலிவு பெற்று பளபளக்கும்.எண்ணெய் பிசுக்கு உள்ளவர்கள் உடனடியாக இதனை வீட்டில் செய்து பார்க்கலாம்.