என் தற்கொலைக்கு காரணம் இவங்கதான்… தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உருக்கமான கடிதம்…
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தற்கொலை செய்துகொண்ட பிளஸ் 2 மாணவியின் கடிதம் கிடைத்துள்ளது. அதில் அந்த மாணவி உருக்கமாக தன் தற்கெலைக்கு காரணம் யார் என்பதை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் இருசப்பன் மேஸ்திரி முதல் தெருவில் மேனகா என்பவர் வசித்து வருகிறார். மேனகா அவர்கள் சென்னை மாநாகராட்சி ராயபுரம் மண்டலத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். கணவனை இழந்த மேனகா தனது மகள், மகன், பெற்றோர்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
மேனகா அவர்களின் மகள் கீர்த்தனா என்பவர் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரன்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அதாவது ஆகஸ்ட் 18ம் தேதி பள்ளி முடிந்து மாணவி கீர்த்தனா வீட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டின் கதவை உள்புறமாக தாள் வைத்துவிட்டு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி கீர்த்தனா அவர்களின் வீட்டை சோதனை செய்தனர். சோதனை செய்து பார்த்ததில் மாணவி கீர்த்தனாவின் புத்தகப் பையில் இருந்து காவல் துறையினருக்கு ஒரு துண்டு சீட்டு கிடைத்தது.
அந்த துண்டு சீட்டை பார்க்கும் பொழுது மாணவி கீர்த்தனா எழுதிய உருக்கமான கடிதம் என்பது தெரிவந்தது. அந்த துண்டு சீட்டில் மாணவி கீர்த்தனா “நான் இந்த முடிவு எடுக்க காரணம் என்னுடைய பொருளாதார பிரிவு மேடம்…” என்று இருந்ததாக காவல்துறையினர் கூறினர்.
பின்னர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்ற பொழுது மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் கீர்த்தனாவின் தற்கெலைக்கு காரணமான பொருளாதார ஆசிரயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் பிரதேபரிசோதனைக்கு உடலை தரமாட்டோம் என்று கூறினர்.
இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெற்றியூர் போலீஸ் உதவி கமிஷ்னர் முகமது நாசர் அவர்கள் மாணவி கீர்த்தனா அவர்களின் தாய் மற்றும் உறவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து இது குறித்து உராய விசாரணை நடத்தப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி கமிஷ்னர் முகமது நாசர் அவர்கள் உறுதி அளித்தார்.
இதையடுத்து மாணவியின் தாய் மற்றும் உறவினர் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு தருவதற்கு சம்மதம் தெரிவித்தனர். பின்னர் மாணவி கீர்த்தனாவின்.உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.