ஜூஸில் விஷம் கலந்து கொடுத்தார்கள்.. மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு..!!

0
444
They mixed poison in the juice.. Mansoor Alikhan's statement made a stir..!!
They mixed poison in the juice.. Mansoor Alikhan's statement made a stir..!!

ஜூஸில் விஷம் கலந்து கொடுத்தார்கள்.. மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு..!!

நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் நேற்று வேலூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அவரின் தொண்டர்கள் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் தெரியவில்லை. 

இதனால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக சென்னை கேகே நகரில் உள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்கட்டமாக கல்லீரல் மற்றும் மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை தரப்பில் இருந்து விளக்கம் அளித்தனர். 

இந்நிலையில் தற்போது மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, “நேற்று குடியாத்தம் சந்தையில் இருந்து திரும்பி கொண்டிருக்கும்போது ஒரு இடத்தில் என்னை கட்டாயப்படுத்தி ஜூஸ் மற்றும் மோர் கொடுத்தாங்க. அதை குடித்த உடனே வண்டியில் இருந்து கீழே விழ இருந்தேன். 

மயக்கம் அடி நெஞ்சில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. மருத்துவமனை அழைத்து சென்று சிகிச்சை அளித்தும் வலி நிற்கவில்லை. தற்போது சென்னை மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்துள்ளார்கள். வலி கொஞ்சம் பரவாயில்லை. விஷ முறிவு மருந்து, நுரையீரல் வலி குறைய மருந்து கொடுத்துள்ளார்கள். மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என்று கூறியுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார். இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Previous articleGOLD RATE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம் விலை! இன்று சவரனுக்கு எவ்வளவு குறைவு?
Next articleகுட்டிக்கரணமே போட்டாலும் பாஜக ஜெயிக்காது – ஜெயக்குமார்..!!