திருடிய அசதியில் மெத்தையில் தூங்கிய திருடன்… காவல்துறையினர் கொடுத்த அதிர்ச்சி..!

Photo of author

By Janani

திருடிய அசதியில் மெத்தையில் தூங்கிய திருடன்… காவல்துறையினர் கொடுத்த அதிர்ச்சி..!

Janani

திருட சென்ற வீட்டில் திருடன் மதுபோதையில் தூங்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகங்கை மாவட்டம், நடுவிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷன். இவர் தனது குடும்பத்தினருடன் காரைக்குடி பகுதியில் வசித்து வந்துள்ளார். இதனால், சொந்த ஊரில் உள்ள வீட்டை பூட்டியே வைத்திருந்துள்ளனர்.இந்நிலையில், வேலைக்காக சொந்த ஊர் பக்கம் சென்ற வெங்கடேசன் தனது வீட்டின் வெளிக்கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். இந்த தகவலை அடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த அஞ்சலை என்பவரது மருமகன் சுதந்திர திருநாதன் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று வீட்டில் உள்ள பொருட்களை திருடி மூட்டையாக கட்டிய அவர் அருகில் உள்ள கட்டிலிலேயே உறங்கியுள்ளார்.

இதனை அடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் திருட வந்த இடத்தில் மதுபோதையில் படுத்துறங்கியது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.