தெரிந்து கொள்ள வேண்டியவை.. குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி..? குலதெய்வ வழிபாட்டின் மகிமை என்ன..?

0
284
#image_title

தெரிந்து கொள்ள வேண்டியவை.. குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி..? குலதெய்வ வழிபாட்டின் மகிமை என்ன..?

நம் ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் என்ற ஒன்று இருக்கும். நம் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்வது அவசியமான ஒன்றாகும். குலதெய்வ வழிபாடு இல்லையெனில் எந்த ஒரு பலனும் நமக்கு கிடைக்காது. எவர் ஒருவர் குலதெய்வ வழிபாட்டை சிறப்பாக தொடர்ந்து செய்து வருகிறாரோ அவர்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் மட்டும் கிடைக்கும்.

குலதெய்வ அருள் இல்லையெனில் வீட்டில் எப்பேர்ப்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு பயனும், புண்ணியமும் கிடைக்காது.

குலதெய்வ வழிபாடு செய்யும் முறை…

உங்கள் குலதெய்வ கோயிலுக்கு மாதம் ஒருமுறையோ முடியாதவர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது சென்று வர வேண்டும்.

அவ்வாறு குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து படையல் போட்டு, தேங்காய் பழம் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். அவரவர் சம்ரதாயத்திற்கு ஏற்ப பூஜை செய்யலாம். இவ்வாறு செய்த பின்னரே வீடு திரும்ப வேண்டும்.

குலதெய்வ வழிபாட்டின் மகிமை…

1)குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து வந்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

2)வீட்டில் இருப்பவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வீட்டில் கெட்ட சக்தி அண்டாது.

3)தொழில் துறையில் சிறந்து விளங்க முடியும்.

4குலதெய்வம் நம் குலத்தை காக்கும்.

5)வீட்டில் குலதெய்வம் தங்கி நமக்கு வேண்டியதை செய்யும். நம் எண்ணம் எல்லாம் ஈடேறும்.