15 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்! கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது!
திருப்பதி அருகே வனப்பகுதிகளில் இருந்து ரகசியமாக கடத்த முயன்ற செம்மரக் கட்டைகளை காவல்துறையினர் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பதி அருகே இருக்கும் ஸ்ரீவாரிமெட்டு சேஷாசம் வனத்தில் இருந்து செம்மரக் கட்டைகள் ரகசியமாக கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் குறிப்பிட்ட வனப்பகுதியில் உடனடியாக சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது வனப்பகுதியில் செம்மரங்களை கடத்திய கும்பல் போலீசாரை பார்த்தவுடன் தப்பித்து ஓடியது. கடத்தல் கும்பலை சினிமா பாணியில் போலீசார் விரட்டிப்பிடித்தனர். இந்த சம்பவத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவர் முதலில் பிடிபட்டார். அவரிடம் இருந்து நான்கு செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில் இரண்டாவதாக பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒருவரும் அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர்.
முதலில் பிடிபட்டவரிடம் 4 செம்மர கட்டைகளும் இரண்டாவதாக பிடிபட்டவர்களிடம் 17 செம்மரக் கட்டைகளும் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்காக பயன்படுத்திய காரும் பிடிப்பது. செம்மர கட்டைகள் மற்றும் காரின் ஒட்டுமொத்த மதிப்பு 15 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் செம்மர கடத்தலுக்காக திருப்பதி வரச்சொன்ன நபரை போலீசார் தேடி வருகின்றனர்.