பெற்ற பிள்ளைகள் ஆறு! கடலை மிட்டாய் விற்றால்தான் சோறு! கணவனை காப்பாற்ற வைராக்கியத்தோடு வெயிலில் போராடும் மூதாட்டி.!!

0
98

பெற்ற பிள்ளைகள் ஆறு! கடலை மிட்டாய் விற்றால்தான் சோறு! கணவனை காப்பாற்ற வைராக்கியத்தோடு வெயிலில் போராடும் மூதாட்டி.!!

தஞ்சை மாவட்டம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர் தினமும் தன் குடும்பத் தேவைக்காக தினமும் வெயிலில் அலைந்து கடலை மிட்டாய் விற்கும் சம்பவம் பார்ப்பவர்களை வேதனை அடையச் செய்கிறது.

மூதாட்டியின் கணவர் கிருஷ்ணமூர்த்தி காது கேளாதவர். இவர்களுக்கு 4 ஆண் பிள்ளைகளும் 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர். கடைசி பிள்ளையை தவிர முதல் ஐந்து பேருக்கும் திருமணம் ஆகி பெற்றோரை புறக்கணித்து தனித்தனியாக குடும்பம் நடத்திக் வருகின்றனர். காது கேட்கவில்லை காலில் மூட்டு அறுவை சிகிச்சை செய்த காரணத்தால் தனது கடலை மிட்டாய் வியாபாரத்தை செய்ய முடியாமல் வீட்டிலேயே முடங்கிப் போனார். பெற்ற பிள்ளைகளின் ஆதரவற்ற நிலை மேலும் மன உளைச்சலை கொடுத்துள்ளது.

இந்நிலையில், குடும்ப வருமானத்திற்காக பூங்கா ஒன்றில் அமர்ந்து கொண்டே வியாபாரம் செய்கிறார். அவரது மனைவி சுசீலா கோயில், பூங்கா வெளிப்பகுதி மற்றும் சாலையோரங்களில் வெயிலில் அலைந்து கடலை மிட்டாய் விற்று வருகிறார். தினமும் அலைந்து திரிந்து விற்றால் கூட ரூ.300 தாண்டாது. கோயிலுக்கு வருபவர்கள் மூதாட்டியை பார்த்து பரிதாபத்தோடு பணம் கொடுத்தாலும் அதை கைநீட்டி வாங்காமல் மிட்டாய் வாங்கிக் கொண்டு காசு கொடுங்கள் என்கிறார்.

பத்தாவது வரை படித்த மூதாட்டி தனது 6 பிள்ளைகளை நம்பி இருந்தது பெருத்த ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது. கடைசி காலத்தில் பிள்ளைகள் காப்பாற்றாமல் போனதால் வயதான காலத்தில் ஓடியாடி உடல் அலுத்து உழைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இப்போதைக்கு கடலை மிட்டாய் வியாபாரம் நன்றாக செல்கிறது இதுபோதும். பெற்ற பிள்ளைகளை நினைத்து அவர் கண்ணீர் விடுவார், நான் இருக்கும்போது நீ அழ கூடாது என்று வைராக்கியத்தோடு பேசும் சுசீலா பாட்டியின் தினசரி வாழ்வு சோகத்தையும், ஆச்சரியத்தையும் கொடுக்கிறது.

author avatar
Jayachandiran