இடைவிடாத வயிற்று போக்கை உடனடியாக நிறுத்த வீட்டிலிருக்கும் இந்த 1 பொருள் போதும்!!
உடல் சூடு,உடலுக்கு ஒற்றுக்கொள்ளாத உணவு,அல்சர்,மூலம்,குடற்புழு பாதிப்பு போன்ற காரணங்களால் தொடர்ந்து வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்படுகிறது.தொடர் வயிற்றுப்போக்கு காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டு அவை கடும் பாதிப்பை உண்டாக்குகிறது.அதிகப்படியான வயிற்றுப்போக்கு குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றுவது நல்லது.
வீட்டு வைத்தியம் 01:
1)தயிர்
2)வெந்தயம்
அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.பிறகு இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.
பிறகு ஒரு கப் புளிப்பு இல்லாத தயிர் எடுத்து அரைத்த வெந்தயப் பவுடரை போட்டு கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
வீட்டு வைத்தியம் 02:
1)மாதுளை பொடி
ஒரு கப் மாதுளை தோலை நன்கு உலர்த்தி பொடியாக்கி கொள்ளவும்.பிறகு இதில் இருந்து ஒரு தேக்கரண்டி மாதுளை பொடி எடுத்து ஒரு கிளாஸ் பாலில் கலந்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
வீட்டு வைத்தியம் 03:
1)மாதுளை பிஞ்சு
இரண்டு அல்லது மூன்று மாதுளை பிஞ்சை அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
வீட்டு வைத்தியம் 04:
1)அத்திபால்
2)நெய்
3)வெல்லம்
ஒரு கிண்ணத்தில் 10 மில்லி அத்திபால் மற்றும் 1/4 தேக்கரண்டி நெய் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.பிறகு அதில் ஒரு துண்டு வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி உடனடியாக குணமாகும்.
வீட்டு வைத்தியம் 05:
1)ஜாதிக்காய்
2)பால்
ஒரு ஜாதிக்காயை உடைத்து மிதமான தீயில் வறுத்து ஆறவிடவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி ஒரு கிளாஸ் பாலில் கலந்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
வீட்டு வைத்தியம் 06:
1)வசம்பு
2)தேன்
அடுப்பில் ஒரு கடாய் வைத்து ஒரு துண்டு வசம்பு போட்டு குறைவான தீயில் ஒரு நிமிடத்திற்கு வறுத்துக் கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.இந்த பவுடர் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்.
பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து குழைத்து தொடர்ந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சீதபேதிக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.