சமந்தாவின் விவாகரத்திற்கு முக்கிய காரணம் இந்த நடிகர் தான்! திரையுலகினர் அதிர்ச்சி!

Photo of author

By Parthipan K

சமந்தாவின் விவாகரத்திற்கு முக்கிய காரணம் இந்த நடிகர் தான்! திரையுலகினர் அதிர்ச்சி!

நடிகை சமந்தாவும் நாகசைதன்யாவும் நீண்ட நாட்களாக காதலித்து பின்பு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்று மேலும் அவர்களின் திருமணம் அக்டோபர் ஆறு மற்றும் ஏழாம் தேதிகளில் நடந்து முடிந்தது. மேலும் நான்கு வருடங்களுக்குப் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து ஆனது அதனை நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா இருவரும் தங்களுடைய விவாகரத்தை இணையதளத்தில் அறிவித்தனர்.

மேலும் விரைவில் இருவரும் இணைந்து விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அது குறித்து இருவரிடம் இருந்து எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.மேலும் இந்நிலையில், சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் விவாகரத்து குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் அந்த தகவலில் 57 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் தான், சமந்தா – நாகசைதன்யாவின் விவாகரத்துக்கு முக்கிய  காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் அதன் முழு விவரமும் தன்னிடம் இருப்பதாகவும் கமல் ஆர். கான் தெரிவித்துள்ளார். இந்த தகவலில்  கூறியுள்ளது குறித்து  திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்பட்டுள்ளது.