இது 1 சுளை இருந்தால் ஆயுசுக்கும் உங்களுக்கு எலும்பு பிரச்சினை வாராது!!

0
114
#image_title

முன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் எலும்பு சம்பந்தமான மூட்டு வலி, எழும்பு தேய்மானம், கை, கால் மூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இளம் வயதினருக்கும் இந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது.

உடல் உழைப்பின்மை, ஆரோக்கியமற்ற உணவுகள், கால்சியம் குறைபாடு இவையெல்லாம் எலும்பு சம்பந்தமான நோய்களுக்கு காரணம். எலும்பு சார்ந்த பிரச்சினைகளை நீக்கி, எலும்பை வலு பெற வைக்க கூடிய வழிமுறைகளை பார்க்கலாம்.

கொட்டைகள் நீக்கிய பலாப்பழம் 3 எடுத்து கொள்ளவும். இந்த பலாப்பழத்தி்ல் கால்சியம் அதிகம் உள்ளதால் அதை பயன்படுத்துகிறோம்.

அடுத்து வீட்டிலேயே உறை ஊற்றிய தயிர் எடுத்து கொள்ளவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில், பலாப்பழம் மற்றும் 1 1/2 டேபிள் ஸ்பூன் கெட்டியான தயிர் சேர்த்து இதனுடன் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு அதை ஒரு கப்பில் போட்டு அதனுடன் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்க்கவும்.

இந்த நாட்டு சர்க்கரையிலும் எலும்புக்கு தேவையான இரும்பு சத்து மற்றும் பல மருத்துவ குணங்களும் இதில் இருக்கிறது. கடைசியாக இதில் சிறிதளவு வறுத்த கருப்பு எள் சேர்க்கவும். இந்த “எள்”லில் அயன் மற்றும் கால்சியம் சத்துகள் உள்ளது.

இது எலும்புகளை வலுப்படுத்தி கொடுக்கும். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து, தொடர்ந்து சாப்பிட்டு வர எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்ந்து எலும்புகள் வலு பெறும்.

author avatar
CineDesk