கிறிஸ் எவர்ட்டின் சாதனையை முறியடித்த இந்த வீராங்கனை

Photo of author

By Parthipan K

கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முதலாவது சுற்றில் 7-5, 6-3 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் கிறிஸ்டி அன்னை விரட்டினார். அமெரிக்க ஓபன் வரலாற்றில் ஒற்றையரில் செரீனா பதிவு செய்த 102-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அமெரிக்க ஓபனில் அதிக வெற்றி பெற்றவரான கிறிஸ் எவர்ட்டின் (அமெரிக்கா) சாதனையை முறியடித்தார். இதே போல் விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), சோபியா கெனின் (அமெரிக்கா), ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), சபலென்கா (பெலாரஸ்), மரியா சக்காரி (கிரீஸ்) உள்ளிட்டோரும் 2-வது சுற்றை எட்டினர். அதே சமயம் செரீனாவின் சகோதரி வீனஸ் வில்லியம்ஸ், 3 முறை சாம்பியனான பெல்ஜியத்தின் கிம் கிலிஸ்டர்ஸ் ஆகியோர் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.