இது ஒரு வித்தியாசமான “சட்னி”!! செய்து சாப்பிட்டு நீங்களே ஒரு பெயர் வையுங்கள்!!
நம் விருப்ப உணவுகளில் ஒன்றான இட்லி மற்றும் தோசைக்கு வித்தியாசமான முறையில் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க.சுவை மிகவும் அருமையாக இருக்கும்.ஒரு முறை செய்து ருசி பார்த்து விட்டால் மீண்டும் மீண்டும் செய்து சாப்பிட தூண்டும். இந்த சட்னியை குறைந்த நேரத்தில் செய்து விட முடியும்.இந்த சட்னி சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*தேங்காய் – 1/2 மூடி
*பொட்டுக்கடலை – 2 கைப்பிடி அளவு
*வேர்க்கடலை – 2 கைப்பிடி அளவு
*புளி – சிறு எலுமிச்சம் பழ அளவு
*வர மிளகாய் – 3
*பூண்டு – 4 பற்கள்
*இஞ்சி – சிறு துண்டு
*எண்ணெய் – 2 தேக்கரண்டி
*சின்ன வெங்காயம் – 5
*சீரகம் – 1/2 தேக்கரண்டி
*கடுகு – 1/2 தேக்கரண்டி
*உளுந்து – 1/2 தேக்கரண்டி
*கறிவேப்பிலை -2 கொத்து
*உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் 1/2 மூடி தேங்காய் எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகள்,2 கைப்பிடி அளவு வேர்க்கடலை,2 கைப்பிடி அளவு பொட்டுக்கடலை மற்றும் 3 மிளகாய் வத்தல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் சிறு துண்டு இஞ்சி,4 பல் பூண்டு,1 கொத்து கருவேப்பிலை,மற்றும் சிறு துண்டு புளி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.அடுத்து இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.இந்த கலவையில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் 1/2 தேக்கரண்டி கடுகு,1/2 தேக்கரண்டி உளுந்து பருப்பு,1/2 தேக்கரண்டி சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
பின்னர் 1 கொத்து கருவேப்பிலை,நறுக்கிய 5 சின்ன வெங்காயத்தை சேர்த்து தாளித்து கொள்ளவும்.பிறகு அடுப்பை அணைத்து தாளித்து வைத்துள்ள கலவையை தயார் செய்து வைத்துள்ள சட்னியில் சேர்த்துக் கொள்ளவும்,