அடேங்கப்பா.. நொச்சி இலையில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா? இது தெரியாமல் போச்சே..!

0
27
#image_title

அடேங்கப்பா.. நொச்சி இலையில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா? இது தெரியாமல் போச்சே..!

நொச்சி இலை தாவர வகையைச் சேர்ந்தது. நொச்சி இலை கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவை இருக்கும். நொச்சி இலை கருநொச்சி, நீலநொச்சி என்று இரண்டு வகை இருக்கிறது. நொச்சித் தாவரத்தைப் போன்றே இருந்தாலும் இலைகள் மற்றும் தண்டுகள் நீல நிறமாக இருக்கும்.

சரி வாங்க நொச்சி இலையின் மருத்துவ பயன்களைப் பற்றி பார்ப்போம் –

காய்ச்சலுக்கு

நொச்சி இலைகளை தலையணையாகச் செய்து  காய்ச்சல் குறையும்

வாத பிரச்சினைக்கு

கீல் வாதம், முக வாதம் போன்ற வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருநொச்சியை மருந்தாக கொடுத்தால் குணமடைவார்கள்.

கால் வீக்கத்திற்கு

கால் வீக்கத்தை போக்க கரு நொச்சி இலைகளை அரைத்து பற்றுப் போட்டால் மூட்டுவலி, உடலில் ஏற்படும் வீக்கங்கள் குறையும்.

சருமத்திற்கு

சருமப் பிரச்சனைக்கு நொச்சி இலையை அரைத்து பயன்படுத்தினால் சரும பிரச்சினைகள் சரியாகும்.

குடலுக்கு

குடலில் உள்ள பூச்சிகளையும், புழுக்களையும் அழிக்கும் திறனை நொச்சி இலைக்கு உண்டு.

பெண்களுக்கு

மாதவிடாய், கர்ப்பகாலப் பிரச்சனைகள், இயக்குநீர் குறைபாடுகள், சினைப்பை நீர்க்கட்டிகள் போன்றவற்றை நொச்சி இலை போக்கும்.

தலைபாரம் குறைய

நொச்சி இலைகளை 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலை வலி, தலைபாரம் குறைந்து விடும்.

author avatar
Gayathri