புதியதாக மது குடிப்பவர்களுக்கு இனிமேல் இது கட்டாயம்!! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!! 

0
156
This is a must from now on for new wine drinkers!! Minister's action announcement!!
This is a must from now on for new wine drinkers!! Minister's action announcement!!

புதியதாக மது குடிப்பவர்களுக்கு இனிமேல் இது கட்டாயம்!! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!!

இனிமேல் புதிதாக மது குடிக்க வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு புதிய நடைமுறை ஒன்றை அமைச்சர்  முத்துசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது   அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடைபெற்ற சோதனையில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் உள்ளார். இப்போது  அமைச்சர் பொன்முடி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இது திட்டமிட்டு செயல்படுத்தப்படும் சதி. இதிலிருந்து அமைச்சர் பொன்முடி மீண்டு வருவார். சோதனைகளை மேற்கொண்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் இதை கண்டு கவலைப்படுவதில்லை. மக்களுக்கான எங்களது பணி வழக்கம் போல் நடைபெறும்.

மேலும் அவர் கூறுகையில் டாஸ்மாக் விவகாரத்தை பொருத்தவரை முதலில் தொழிலாளர்களுக்கு உள்ள பிரச்சனைகள் குறித்து விரிவாக கலந்து பேசி அதற்கான தீர்வுகளை காண இருக்கிறோம். மதுபானங்களும் இறக்குவது குறித்து டாஸ்மாக் தொழிற்சங்கத்தினருடன் பேசி வருகிறோம்.

டெட்ரா பேக்( பாக்கெட்) மூலம் மது விற்பனை செய்யும் திட்டமானது, 90 மி.லி என்ற அளவில் மதுபானம் கொண்டு வருவதும் இன்னும் பரிசீலணையில் தான் உள்ளது. இந்த திட்டமானது வரலாம் அல்லது வராமல் போகலாம். ஆனால் அரசை பொருத்தவரை காலை 7 மணிக்கு டாஸ்மாக் திறக்கும் எண்ணம்  எப்போதும் இல்லை.

கடினமான பணிகளை மேற்கொள்பவர்கள் காலை நேரங்களில் மது அருந்துகிறார்கள். அவர்களை குடிகாரன் என்று சொல்வதை ஏற்க முடியாது. அவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு உரிய ஆலோசனையை கூறுங்கள்.

மேலும் முதல் முதலில் புதிதாக மது குடிக்க வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான கவுன்சிலிங் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதைப்போல் வயதானவர்கள் உடல் மோசமான நிலையில் உள்ளவர்கள் குடிப்பதை தடுக்கவும் கவுன்சிலிங் வழங்கப்பட உள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நூற்பாலைகளின் உரிமையாளர்களிடம் அரசு சார்பாக பேசி வருகிறோம். விரைவில் அது தொடர்பான முடிவுகள் சொல்லப்படும் என அவர் தெரிவித்தார்.

Previous articleரூ 70 ஆயிரம் கடனுக்கு வீட்டுக்கு பூட்டு!! தொழிலாளி செய்த விபரீத செயல் !! 
Next articleமெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!! பயணிகள் கடும் அவதி!!