ரூ 70 ஆயிரம் கடனுக்கு வீட்டுக்கு பூட்டு!! தொழிலாளி செய்த விபரீத செயல் !! 

0
37
Lock the house for a loan of Rs 70 thousand!! Atrocious act done by the worker !!
Lock the house for a loan of Rs 70 thousand!! Atrocious act done by the worker !!

ரூ 70 ஆயிரம் கடனுக்கு வீட்டுக்கு பூட்டு!! தொழிலாளி செய்த விபரீத செயல் !! 

பக்கத்தில் வாங்கிய கடனுக்கு வீட்டில் பூட்டு போட்டதால் தொழிலாளி விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார்.

சென்னையில் உள்ள  புளியந்தோப்பு, கே.பி.பார்க், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள  9-வது தளத்தில் வசித்து வருபவர்  சியாம் சுந்தர் வயது 27.  இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், கனிஷ்கா (4), கயல் (3) மற்றும் கனுஸ்ரீ (1) என 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். சியாம் சுந்தர்  எழும்பூரில் உள்ள டிராவல்ஸ் கம்பெனியில் லோடுமேனாக வேலை செய்து வந்தார்.

சியாம் அதே பகுதியில் உள்ள அஸ்கர் அலி என்பவரிடம் குடும்பச் செலவுக்காக ரூ.70 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதனால் அஸ்கர் அலி சியாமிடம் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொடுத்த கடனை கேட்பதற்காக அஸ்கர் அலி நேற்று முன்தினம் சியாம் வீட்டுக்கு  சென்றுள்ளார். அங்கே சியாமின் வீட்டில் கதவு மூடப்பட்டு பூட்டு தொங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த அஸ்கர் அலி தன்னிடம் இருந்த மேலும் ஒரு பூட்டால் சியாம் சுந்தர் வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்த சூழ்நிலையில் வெளியே சென்று இருந்த மீனாட்சி தனது மகள்களுடன் இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தங்கள் வீட்டின் கதவில் 2 பூட்டுகள் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் காரணமாக கணவரை தேடி எழும்பூர் சென்றுள்ளார். அங்கு அவரது கணவர் இல்லாததால் அஸ்கர் அலி வீட்டுக்கு சென்று குழந்தைகளை வைத்துக்கொண்டு வெளியே தங்க முடியாது. எனவே பணத்தை கொடுக்க வேறு ஏற்பாடு செய்கிறேன். எனக்கூறி   சாவியை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தார்.

பின்னர் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பூட்டிய வீட்டுக்குள் கணவர் சியாம் சுந்தர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி தகவல் அறிந்த பேசின் பிரிட்ஜ் காவல்  நிலைய போலீசார் சியாம் சுந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

போலீஸ் விசாரணையில் தனது வீட்டில் 2 பூட்டுகள் தொங்குவதை கண்ட சியாம் சுந்தர் அஸ்கர் அலியிடம் கேட்டார். அதற்கு சாவியை தர அஸ்கர் அலி மறுத்ததால் விரக்தி அடைந்த சியாம் தனது வீட்டின் பால்கனி வழியாக குதித்து பூட்டிய வீட்டுக்குள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்தது.

இதனால் போலீசார் அஸ்கர் அலி பேசின் பிரிட்ஜ் போலீசில் சரணடையவே அவரை  கைது செய்து சிறையில் அடைத்தனர்.