தமிழ் புத்தாண்டுக்கு ருசிக்க வேண்டிய இனிப்பு இது! இதற்கு ஒரு மாம்பழம் போதும்!
தமிழ் மாதங்களில் முதல் மதமான சித்திரையில் சுவையான மாம்பழ பாயாசம் செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)மாம்பழம் – ஒன்று
2)வெள்ளை சர்க்கரை – 1/4 கப்
3)காய்ச்சாத பால் – 1/4 கப்
4)ஏலக்காய் – 2
5)திராட்சை – 10
6)முந்திரி – 10
7)நெய்
மாம்பழ பாயாசம் செய்வது எப்படி?
ஒரு மாம்பழத்தை கொட்டை மற்றும் தோல் நீக்கிவிட்டு அதன் சதை பற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு சுத்து விடவும்.பிறகு வெள்ளை சர்க்கரை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அரைத்த மாம்பழ கூழை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.மாம்பழ கூழ் பச்சை வாடை நீங்கி நன்கு கொதித்து வந்ததும் காய்ச்சாத பால் சேர்க்கவும்.
பின்னர் வாசனைக்காக 2 ஏலக்காயை இடித்து சேர்க்கவும்.இல்லையென்றால் ஏலக்காய் தூள் 1/4 தேக்கரண்டி அளவு சேர்த்து கலந்து விடவும்.
ஐந்து நிமிடங்களுக்கு மாம்பழ கலவையை கொதிக்க விட வேண்டும்.பிறகு மற்றொரு அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்.
பின்னர் திராட்சை,முந்திரி சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.இதை கொதிக்கும் மாம்பழ பாயாசத்தில் போட்டு கிளறி இறக்கவும்.
இவ்வாறு செய்தால் மாம்பழ பாயாசம் மிகவும் சுவையாகவும்,தித்திப்பாகவும் இருக்கும்.