அடகில் வைத்துள்ள நகைகளை மீட்க உதவும் பரிகாரம் இது!! 100% பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

அடகில் வைத்துள்ள நகைகளை மீட்க உதவும் பரிகாரம் இது!! 100% பலன் கிடைக்கும்!!

இன்றைய உலகில் தங்கம் வாங்குவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.அதனால் இருக்கின்ற நகைகளை பத்திரப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்.ஆனால் நமக்கு ஏற்பட்டிற்கும் கடன் பிரச்சனையால் நகை அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றோம்.

தங்க நகைகளை அடகு வைத்து விட்டால் அதை எளிதில் மீட்க முடியாது.ஒரு சிலர் நகையை அடகு வைத்துவிட்டு 10 வருடம்,15 வருடங்கள் கூட மீட்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.எனவே அடகில் உள்ள நகைகளை மீட்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை வாரத்தில் ஒருநாள் என்று தொடர்ந்து 9 நாட்கள் செய்து வரவும்.

அடகு நகைகளை மீட்க பரிகாரம்:-

நீங்கள் எந்த நாளில் இந்த பரிகாரத்தை செய்கிறீர்களோ அந்த நாளில் தலைக்கு குளித்து உடலை சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

பிறகு வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கடவுள் படத்தை துடைத்து மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைத்துக் கொள்ளவும்.பிறகு கடவுளுக்கு உகந்த மலர்களை கொண்டு மாலை கட்டி சாற்றவும்.

அதன் பின்னர் ஒரு கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு நிரப்பிக் கொள்ளவும்.அதன் மேல் ஒரு அகல் விளக்கு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி மனதார வழிபடவும்.

இவ்வாறு வாரத்தில் ஒரு நாள் தொடர்ந்து 9 தினங்கள் செய்து வந்தால் அடகில் உள்ள நகைகளை எளிதில் மீட்டு விடலாம்.