இனிமேல் தமிழக ரேசன் கடைகளில் இதுவும் விற்பனை !! பொதுமக்களுக்கு ஹாப்பி நியூஸ்!!
சென்னையில் 82 ரேசன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.
தற்போது பெட்ரோல் விலையை விட ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு இருப்பது தக்காளி விலை தான். அதிகரித்து வரும் தக்காளி விலையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சாமானிய மக்கள் தக்காளி வாங்க முடியாத சூழல் உள்ளது. எனவே தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த சூழ்நிலையில் தக்காளி உயர்வை கட்டுபடுத்த அரசால் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆலோசனைக்கு பின்னர் அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,
ரேஷன் கடைகளில் ரூ.60 ரூபாய்க்கு நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும். முதலில் சென்னையில் 82 கடைகளில் தக்காளி நாளை விற்பனை செய்யப்பட உள்ளது. விரைவில் மற்ற மாவட்டங்களிலும் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.
மேலும் பசுமை பண்ணை கடைகளில் தக்காளி கொள்முதல் அதிகரிக்கப் பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் தக்காளி குறைய வாய்ப்பில்லை. அனைத்து விவசாயிகளிடம் தக்காளி நேரிடையாக கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இது போல தக்காளி விலை உயர்வு ஏற்படுவதால் அடுத்த ஆண்டு இது போல நேராதவாறு தடுப்பதற்க்கான நடவடிக்கை எடுக்கப்படும்.