திருப்பதியில் இதற்கு தடை!! பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை!!
உலகப்புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று தான் ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கக்கூடிய திருப்பதி ஏழுமலையான் கோவில். இதை உலகின் மிகப்பெரிய பணக்காரக் கடவுள் என்று கூறுவார்கள்.
இங்கு தினமும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருகின்றனர். எனவே எப்பொழுதும் இங்கு கூட்டம் நிறைந்தே காணப்படும்.
திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அதிக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது திருப்பதிக்கு அசைவ உணவுகள், போதை பொருட்கள், மது பாட்டில்கள், சிகரெட், பீடி, வேற்று மதம் குறித்த விளம்பரப் பொருட்கள் முதலியவற்றை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தங்கள் வீட்டில் வளர்த்தக் கூடிய செல்ல பிராணிகளை கோவிலுக்கு அழைத்து வர திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்த பக்தர்கள் சில பேர் தங்களது செல்ல பிராணியான நாயையும் வேனில் அழைத்து வந்தனர். இங்கு சரியாக வாகனத்தை சோதனை செய்யாததால் பக்தர்கள் நாயை தங்களுடன் கோவிலின் மலைக்கு அழைத்து சென்றனர்.
இதைப்பார்த்த ஊழியர்கள் சிலர் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் இவர்களை நாயுடன் மடக்கி பிடித்தனர்.
இனிமேல் திருப்பதி மலைக்கு நாயுடன் வரக்கூடாது என்று பக்தர்களை எச்சரித்தனர். மேலும் அவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டனர்.
பக்தர்கள் தரிசனம் பார்க்க அதிகாரிகளிடம் எவ்வளவோ பேசியும் தேவஸ்தான அதிகாரிகள் மனம் இறங்கவில்லை. எனவே கர்நாடகாவில் இருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சோதனை சாவடியில் சரியாக கவனிக்காமல் நாயுடன் வந்த பக்தர்களை அனுமதித்ததால் அந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் கூறி உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் விபத்துக்களை தடுக்கும் விதமாக மலைபாதையில் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.