அரசு மருத்துவமனைகளில் இனிமேல் இவ்வாறு தான் இருக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என சுகாதாரதுறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவர்கள் சரியான நேரத்தில் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். என கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை அனைத்து அரசு மருத்துவர்களும் கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என சுகாதார துறை செயலாளர் சுகன்தீப் சிங்க் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேபோல புறநோயாளிகள் பிரிவு பொறுப்பில் உள்ள மருத்துவர்கள், காலை 7:30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். பிற மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும்.
அடுத்ததாக மாவட்ட கலெக்டர்கள் அரசு மருத்துவமனை முதல்வர்கள், டீன்கள், மருத்துவ சேவைகள் இணை இயக்குனர், மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனர், ஆகியோர் வெளிநோயாளிகளுக்கான நேரத்தை கடைபிடிப்பதை உறுதி செய்யுமாறு அந்த உத்தரவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசு மருத்துவமனைகளில் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பிரசவ இறப்புகள், தவறான சிகிச்சை முறைகள், மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்களே மருத்துவம் பார்ப்பது போன்ற குற்றச்சாட்டுகளில் அரசு மருத்துவமனை சிக்கி தவிக்கிறது. இதை தவிர்க்கவும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை முறையை மேம்படுத்தவும் மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக தான் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோரின் சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் இந்த முயற்சிகள் செய்யப்பட்டு உள்ளன.