அடிப்படை கணினி மற்றும் டிகிரி முடித்தவர்களா?? நீங்கள்!! இந்த வேலை உங்களுக்கு தான்!! 

0
54
Basic computer and degree completion?? You!! This job is for you!!
Basic computer and degree completion?? You!! This job is for you!!

அடிப்படை கணினி மற்றும் டிகிரி முடித்தவர்களா?? நீங்கள்!! இந்த வேலை உங்களுக்கு தான்!! 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி, காங்கேயம், பல்லடம்,பொங்கலூர், திருப்பூர், வெள்ளகோவில், ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 10 வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இதற்கு கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் எம்.எஸ் ஆபீஸ் 3 மாதங்களுக்கான சான்றிதழுடன் பயிற்சி பெற்று இருக்க வேண்டும்.

** வயது வரம்பு : 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

** மேலும் இதுபோன்ற திட்டங்களில் 2 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும்.

** மேலும் முன் அனுபவமாக குறிப்பிட்ட பணி புரியும் காலத்தில் நன்கு பணியாற்றி இருக்க வேண்டும்.

** அடுத்ததாக பேச்சுத் திறன் மற்றும் தலைமைத் திறன் கொண்டிருக்க வேண்டும்.

** முக்கியமாக காலி பணியிடங்கள் கோரப்பட்டுள்ள வட்டாரத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

** இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்து இருப்பதோடு கட்டாயம் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

** மாதம் ரூ.12000 ஊதியமாக இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.

** தேர்வு முறை:   எழுத்துத் தேர்வு வருகின்ற ஜூலை 20-ஆம் தேதியும், நேர்முகத்தேர்வு 2௪-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

இணை இயக்குனர்,

திட்ட இயக்குனர்,

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்,

மகளிர் திட்டம்,

நம்பர்.305, மாவட்ட கலெக்டர் அலுவலகம்,

திருப்பூர் 641 604.

கடைசி நாள்:  வருகிற ஜூலை 13-ஆம் தேதி.

மேலும் தேவையான விவரங்களுக்கு 0421 2971149 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அறிந்துக் கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.