கேரளா ஸ்பெஷல் பாயாசம் ரெசிபி இது! ஒருமுறை செய்தால் திரும்ப செய்யத் தூண்டும்!

0
104
#image_title

கேரளா ஸ்பெஷல் பாயாசம் ரெசிபி இது! ஒருமுறை செய்தால் திரும்ப செய்யத் தூண்டும்!

பாலாடை வைத்து கேரளா ஸ்டைல் பாயாசம் செய்வது குறித்த செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருள்கள்:-

*பாலாடை – 200 கிராம்

*தேங்காய் – 2

*நெய் – 6 ஸ்பூன்

*முந்திரி – 15

*உலர் திராட்சை – 20

*வெல்லம் – 350 கிராம்

*சுக்கு பொடி -1 ஸ்பூன்

*உப்பு – சிட்டிகை

*தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்

​செய்முறை….

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 350 கிராம் வெல்லம் போட்டு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சிக் கொள்ளவும். அடுத்து தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதில் பாலாடை போட்டு வேக வைக்கவும்.

10 நிமிடங்கள் வரை வேகவிட்டு பின்பு நீரை வடித்து குளிர்ந்த நீரை ஊற்றி அலசி கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1/2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் வெல்லப் பாகை சேர்த்து சூடானதும் அதில் பாலாடையைச் சேர்த்து 5 நிமிடம் வரை கொதிக்க விடவும். பின்னர் அதில் அரை ஸ்பூன் நெய் விடவும்.

அடுத்து அதில் தேங்காய் பாலைச் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கொள்ளவும். அடுத்து அதில்
சிட்டிகை அளவு உப்பு, சுக்குப் பொடி சேர்த்துக் கொள்ளவும். அடுத்து வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை சேர்த்து கலந்து விட்டால் பாலாடை பாயாசம் தயார்.