இவருதான் எனக்கு தலைமை ஆசிரியர் – கிறிஸ் கெய்ல்

Photo of author

By Parthipan K

வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக உள்ளார்.
இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘திரும்பவும் வகுப்பறைக்கு வந்துள்ளோம். சில புதிய வீரர்கள் வந்துள்ளனர். அவர்களுடன் இருப்பது சிறப்பான விசயம். அதுபோல் சில புதிய ஆசிரியர்கள் வந்துள்ளனர். நாங்கள் புதிய தலைமை ஆசிரியரை (அனில் கும்ப்ளே) பெற்றுள்ளோம். புதிய கேப்டனாக கேஎல் ராகுல் இருக்கிறார். இருவருடன் சேர்ந்து பணியாற்ற காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.