இதுதான் உலகின் சிறந்த போர் விமானம் – எம்எஸ் டோனி

Photo of author

By Parthipan K

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி ரபேல் விமானங்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இந்திய விமானப்படைக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எம்எஸ் டோனி டுவிட்டர் பக்கத்தில் உலகின் சிறந்த போர் விமானம் என்று பெயர் பெற்ற ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இறுதியாக சேர்க்கப்பட்ட விழா நடைபெற்றுள்ளது. புகழ்பெற்ற 17 படைப்பிரிவுக்கு  வாழ்த்துக்கள். ரபேல் ‘மிராஜ் 2000’-ன் சேவை சாதனையை முறியடிக்கும் என்று நம்புகிறோம். ஆனால் Su30MKI என் விருப்பமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்