இதனால்தான் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது? இதனை மட்டும் செய்தால் போதும்!
நம்மில் சிலருக்கும் இரவு சரியான தூக்கம் இன்மை ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பதை இந்த பதிவு மூலமாக காணலாம்.
அன்றாடம் வாழ்வில் உடல் இளைப்பில்லாத செய்யக்கூடிய வேலைகள் மற்றும் உணவு பழக்க வழக்கங்களின் காரணமாகவும் அதிகப்படியான மன அழுத்தம் காரணமாக உறங்குவதில் பிரச்சனை ஏற்படுகிறது.
சரியான தூக்கம் இன்மை என்றால் நம் உடலில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும். இதனை எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம் என்பதை விரிவாக காணலாம். சிலர் டீ காபிக்கு அதிகம் குடிப்பவர்களாக இருப்பார்கள் எனவே இரவு உறங்குவதற்கு முன் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன் டீ அல்லது காபி குடிப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
இரவு நேரங்களில் ஜீரணம் ஆகாத உணவுகள் அல்லது அளவுக்கதிகமான உணவுகளை இரவு உறங்குவதற்கு முன் சாப்பிடக் கூடாது. இதன் விளைவாக இரவு உறங்கும் பொழுது ஜீரணம் சரிவர இயங்காத காரணத்தினால் தூக்கமின்மை ஏற்படுகிறது. எனவே அளவான உணவுகளை எடுத்துக் கொண்டதற்கு பிறகு உறங்க வேண்டும்.
தற்போது உள்ள சூழலில் பலர் பகல் நேரங்களில் உறங்குகின்றனர். இதன் காரணமாக இரவு நேரங்களில் தூக்கமின்மை ஏற்படுகிறது. எனவே பகல் நேரங்களில் உறங்குவதினை தவிர்த்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயினால் அவதிப்பட கூடியவர்கள் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சரியான தூக்கம் இன்மை ஏற்படுகிறது. இதனை மருத்துவரிடம் அணுகி அதிகப்படியான இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி சீராக்கி கொள்ள வேண்டும்.