சினிமா தியேட்டரில் இனி தகாத வார்த்தைகளை பேசினால் இதுதான் தண்டனை!! நன்றாக பாடம் புகட்டிய பொதுமக்கள்!
திரையரங்குகளில் மது அருந்திவிட்டு வரக்கூடாது என்ற விதிகள் இருந்தாலும் அது சரிவாரியாக கடைபிடிப்பது இல்லை. குறிப்பாக திரையரங்குகளில் படம் போடுவதற்கு முன் இவ்வாறு குடித்துவிட்டு வரும் நபர்கள் கூச்சல் இடுவதும், தகாத வார்த்தைகளை பேசுவதையும் வழக்கமாகத்தான் வைத்துள்ளனர். அவ்வாறு கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலம் பகுதியில் உள்ள ஓர் திரையரங்கில் இரு நபர்கள் குடித்துவிட்டு தகாத வார்த்தைகளால் பேசி உள்ளனர்.
திரையரங்கில் இருந்த பொதுமக்கள் பலமுறை அவர்களை அமைதி காக்கும் படி கூறியும் அந்த போதை ஆசாமிகள் அதனை சிறிதும் பொருட்படுத்தவில்லை. மீண்டும் தகாத வார்த்தைகளால் பேச ஆரம்பித்துள்ளனர். கோபமடைந்த பொதுமக்கள் அந்த போதை ஆசாமிகளுக்கு பாடம் புகட்டும் படி, அவர்களை அடித்து உதைத்துள்ளனர்.உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து போலீசார் திரையரங்கிற்கு வந்து ரகலையில் ஈடுபட்டவர்களை அழைத்து விசாரணை செய்து வருகின்றனர்.