லியோ திரைப்படத்தில் நடிக்காமல் போனதற்கு காரணம் இது தான்!!! நடிகர் விஷால் ஓபன் டாக்!!!

0
166

லியோ திரைப்படத்தில் நடிக்காமல் போனதற்கு காரணம் இது தான்!!! நடிகர் விஷால் ஓபன் டாக்!!!

லியோ திரைப்படத்தில் நடிக்காமல் இருந்ததற்கு உண்மையான காரணத்தை நடிகர் விஷால் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லியோ திரைப்படத்தின் எடிட்டிங் வேலைகளை தொடர்ந்து வி.எப்.எக்ஸ்(VFX) வேலைகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது.

ஏற்கனவே நடிகர் விஷால் அவர்கள் லியோ திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் நடிகர் விஷால் அவர்கள் அந்த தகவலை மறுத்து லியோ திரைப்படத்தில் நடிக்கவில்லை என்று கூறினார். இந்நிலையில் நடிகர் விஷால் அவர்கள் லியோ திரைப்படத்தில் நடிக்காததற்கு என்ன காரணம் என்பதை பற்றி கூறியுள்ளார்.

நடிகர் விஷால் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ திரைப்படத்தில் நடிக்காததற்கு என்ன காரணம் என்பதை பற்றி கூறியுள்ளார். இது தொடர்பாக நடிகர் விஷால் “லியோ திரைப்படத்தில் நான் நடிக்க 4 மாதங்கள் கால்ஷீட் தேவைப்படும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் என்னிடம் சொன்னார். ஆனால் அந்த சமயம் நான் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன். அதனால் லியோ திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை. என்னுடைய சூழலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் புரிந்து கொண்டார்” என்று கூறியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் நடிகர் விஷால் அவர்களை ஹரோல்ட் தாஸ் அதாவது நடிகர் அர்ஜூன் அவர்களின் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Previous articleஇரண்டாவது முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்!!! இங்கிலாந்து வீராங்கனை படைத்த சாதனை!!!
Next articleஎனக்கு கல்யாணம் எல்லாம் ஆகல!!! ஆனால் எனக்கு ஒரு குழந்தை இருக்கின்றது!!! பிரபல நடிகை பகீர் பேட்டி!!!