“திருப்பதி லட்டு” சுவையாக இருக்க காரணம் இது தான்!! இப்படி செய்தால் அமிர்தம் போல் இருக்கும்!!
நம் அனைவருக்கும் பிடித்த இனிப்பு பண்டங்களில் ஒன்று லட்டு.அதுவும் திருப்பதி லட்டு என்றால் சொல்லவே வேண்டியதில்லை.காரணம் அந்த லட்டுவின் மணமும்,சுவையும் நம்மை சுண்டி இழுக்கும்.இந்த லட்டுவை வாங்குவதற்காகே நம்மில் பலர் திருப்பதி செல்வதை வழக்கமாக வைத்திருப்போம்.ஆனால் திருப்பதி கோவிலில் தரும் லட்டுவை அதே சுவையில் வீட்டில் செய்ய முடியும்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை முறையாக பாலோ செய்து பாருங்கள் திருப்பதி லட்டுவின் அசல் சுவை இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
*கடலை மாவு – 150 கிராம்
*சர்க்கரை – 300 கிராம்
*பச்சரிசி மாவு – 1 1/2 தேக்கரண்டி
*பால் – 150 மில்லி
*ஏலக்காய் – 2
*முந்திரி – 15 கிராம்
*உலர் திராட்சை – 15 கிராம்
*பச்சை கற்பூரம் – சிறு துண்டு
*நெய் – 3 தேக்கரண்டி
*கற்கண்டு – 3 தேக்கரண்டி
எண்ணெய் – 1/2 லிட்டர்
செய்முறை:-
1.ஒரு பாத்திரத்தில் அரசி மாவு கொட்டி அதில் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.பிறகு பால் சிறிதளவு சேர்த்து நன்கு கலக்கவும்.
2.அதில் கடலைமாவு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பால் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.
3.கலக்கி வைத்துள்ள கடலை மாவு கெட்டியாக இருக்கும் பட்சத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கடலைமாவை கலக்கி கொள்ளவும்.
4.அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் கரைத்து வைத்துள்ள கடலைமாவை வைத்தி பூந்தியாக செய்து கொள்ளவும்.
5.செய்து வைத்துள்ள பூந்தியில் பாதி எடுத்து ஒரு மிக்ஸி ஜாரிலில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
6.பிறகு அதனை பூந்தி இருக்கும் பாத்திரத்தில் கொட்டவும்.
7.அதன் பின்னர் அடுப்பில் கடாய் வைத்து அதில் சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து சூடு படுத்தவும்.இவை ஒரு கம்மி பதம் வரும் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
8.பிறகு ஓரு மிக்ஸி ஜாரில் ஏலக்காய் மற்றும் சர்க்கரை 1 ஸ்பூன் சேர்த்து பொடியாக அரைத்து அதை சர்க்கரை பாகில் சேர்க்க வேண்டும்.அதோடு பச்சை கற்பூரம் சிறு துண்டு சேர்த்து கலக்கி விடவும்.
9.பிறகு ஒரு கடாய் வைத்து அதில் நெய் ஊற்றி அவை சூடேறியதும் முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
10.சர்க்கரை பாகு உள்ள பாத்திரத்தில் செய்து வைத்துள்ள பூந்தி மற்றும் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி,திராட்சை ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும்.அதோடு சிறு கற்கண்டுகளை சேர்த்து நன்கு கலக்கவும்.
11.கையில் சிறிதளவு நெய் தடவி கொண்டு தேவைக்கேற்ப உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.இந்த முறையில் செய்து சாப்பிட்டால் அசல் திருப்பதி லட்டுவின் சுவையை உணர முடியும்.