வணங்கான் திரைப்படத்தில் விலகியதிற்கு காரணம் இது தான்! பளிச்சென்று உண்மையை கூறிய மமிதா பைஜூ!!
இயக்குநர் பாலா அடித்ததாக பரவும் வதந்திக்கும் வணங்கினர் திரைப்படத்திலிருந்து விலகியதற்கான காரணத்தையும் நடிகை மமிதா பைஜூ அவர்கள் தற்பொழுது கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் நீண்ட வருடங்களுக்கு பிறகு வணங்கினர் என்ற திரைப்படம் உருவாகி வந்தது. வணங்கான் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வந்தது. இந்நிலையில் ஒரு சில பிரச்சனையால் நடிகர் சூர்யா அவர்கள் வணங்கினர் திரைப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து நடிகை கிரித்தி ஷெட்டி அவர்களும் வணங்கினர் திரைப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து வணங்கான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை மமிதா பைஜூ அவர்களும் விலகினார்.
இதையடுத்து படக்குழு நடிகர் அருண் விஜய் அவர்களை அணுகி அவரை வணங்கினர் திரைப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி அவரை வைத்து வணங்கினர் திரைப்படத்தை எடுத்து வருகின்றது.
வணங்கான் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் வீடியோ எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகை மமிதா புது அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் பாலா என்னை அடித்ததாக கூறினார். இந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலானது. இதையடுத்து இந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக நடிகை மமிதா புது பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை மமிதா பைஜூ அவர்கள் பதிவிட்டுள்ளதில் “நான் இங்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்பி இந்த பதிவை போட்டுள்ளேன். நான் நடித்து விலகிய வணங்கான் திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அனைத்து தகவல்களும் ஆதாரமற்றவை. நான் கொடுத்த நேர்காணல் வீடியோவில் ஒரே ஒரு பகுதியை மட்டும் கட் செய்து வீடியோவாக பதிவிட்டு அதை தவறான செய்தியாக பதிவிட்டு வருகின்றனர்.
நான் இயக்குநர் பாலா அவர்களுடன் ஒரு வருடத்திற்கும் மேல் பணியாற்றி இருக்கின்றேன். அதில் படத்திற்கு முந்தைய பணிகளும் அடங்கும். படத்திற்கு பிந்தைய பணிகளும் அடங்கும். இயக்குநர் பாலா அவர்கள் என்னிடம் கனிவாக நடந்து கொண்டார். மேலும் என்னை ஒரு நல்ல நடிகையாக மாற்ற முயற்சி செய்துள்ளார். இங்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். வணங்கினர் படப்பிடிப்பில் நான் மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ எந்தவித ஒரு துன்பத்தையும் நான் அனுபவிக்க வில்லை என்பதை மீண்டும் பதிவு செய்து கொள்கின்றேன்.
நான் வணங்கான் திரைப்படத்தில் இருந்து விலகியதற்கு என்னுடைய தொழில்முறை சார்ந்த காரணங்கள் மட்டுமே தவிர வேற எந்தவொரு காரணமும் இல்லை. இது தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் என்னை தொடர்பு கொண்டு பேசிய ஊடகங்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். என்னை புரிந்து கொண்டதற்கு நன்றி” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.