இந்த அணிதான் ஐபிஎல் பட்டதை உறுதியாக வெல்லும் – கெவின் பீட்டர்சன்

0
163

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் மிக குரிய காலத்தில் உலகம் முழுவதும் பரவியது. இதற்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கபட்டன. இதில் மிக முக்கியமானவை ஐபிஎல் தொடரும். ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் இந்த மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக வீர்கள் அனைவரும் ஐக்கிய அமீரகத்திற்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் பட்டம் வெல்லபோவது யார் என்று முன்னாள் வீரர்கள் சிலர் கணித்துவருகின்றனர். அதன்படி தற்போது இந்த ஆண்டு ஐபிஎல் பட்டதை வெல்ல போவது டெல்லி அணி தான் சென்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

Previous articleதமிழகத்தில் மேலும் 5495 பேருக்கு கொரோனா: இன்றைய நிலவரம்!!
Next articleஐபிஎல் ரசிகர்களுக்காக புதிய அறிவிப்பை வெளியிட்ட ட்விட்டர்