எம்பிகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கமுடியாது! அனைவரும் சமம் தான் நாடாளுமன்றம் வெளியிட்ட உத்தரவு!
தற்போது தான் கொரோனா பரவல் குறைந்து மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.மேலும் பள்ளி,கல்லூரி,மற்றும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் படிப்படியாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வந்தனர்.ஆனால் மீண்டும் கொரோனா எழுச்சி பெற்று வர தொடங்கி உள்ளது.சீனாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது.
இந்தியாவில் நான்கு பேருக்கு இந்த புதிய வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.மத்திய அரசு முன்னதாகவே அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்து வருகின்றது. இந்த நோய் தொற்றுக்கு அறிகுறியாக காய்ச்சல், இரும்பல் ,சோர்வு ஆகியவை ஏற்படும்.ஒரு சிலருக்கு வாந்தி மயக்கம் போன்றவைகளும் தோன்றும்.
இந்நிலையில் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும் மேலும் இதுவரையிலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.தற்போது டெல்லி ஆக்ரா தாஜ்மஹால்கு வருபவர்கள் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத்தில் தலைவர் ஜெக்தீப் தன்கார் கூறுகையில் எம்பிக்கள் முககவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும்.நாம் தான் நம்முடைய நாட்டிற்கு முன்னுதாரணமாக விளங்கவேண்டும். எம்பிகளுக்கு எந்த சலுகையும் வழங்க முடியாது அனைவரும் சமம் தான். அதனால் முககவசம் அணிதல்,சானிடைசர்களை பயன்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பின்பற்ற வேண்டும்.
மேலும் கடந்த கொரோனா காலத்தை நாம் அனைவரும் நினைவில் கொள்வது மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.நாடாளுமன்ற நுழை வாயிலில் எம்பிகளுக்கு முககவசம் வழங்கப்பட்டு வருகின்றது.