மாதவிடாய் முதல் தைராய்டு வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானம் போதும்!!

Photo of author

By Rupa

மாதவிடாய் முதல் தைராய்டு வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானம் போதும்!!

இன்றைய காலத்தில் பெண்களுக்கு Pcod,தைராய்டு உள்ளிட்டவை தலையாய பிரச்சனையாக இருக்கின்றது.ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால் கருவுருதலில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது.இந்த பிரச்சனைகளை ஆரம்ப காலத்திலேயே கவனித்து சரி செய்தல் அவசியம் ஆகும்.ஒருவேளை கவனிக்க தவறினால் எதிர்காலத்தில் பெண்கள் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இந்த பாதிப்புகளுக்கு மாத்திரையை காட்டிலும் இயற்கை முறை வைத்தியம் சிறந்த ஒன்றாக விளங்குகிறது.இதனை பயன்படுத்துவதால் பெண்களுக்கு எந்த ஒரு பின்விளைவுகளும் ஏற்படாது.

தேவையான பொருட்கள்:

ஓமம் – 1/2 தேக்கரண்டி

கருஞ்சீரகம் – 1/4 தேக்கரண்டி

சுக்கு – சிறு துண்டு

கொத்தமல்லி – 2 தேக்கரண்டி

செய்முறை:-

மேல குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் உரலில் போட்டு கொர கொரப்பாக இடித்து கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 150 ml அதாவது ஒரு பெரிய டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.பின் இடித்து வைத்துள்ளவற்றை அதில் சேர்த்து 7லிருந்து 8 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.

பிறகு ஒரு டம்ளரில் வடிகட்டி அவற்றில் தேவைக்கேற்ப நாட்டு சர்க்கரை,கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு போன்றவற்றை சேர்த்து குடிக்கலாம்.இதனை இரவில் உணவு உட்கொண்ட பிறகு குடிக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முறையற்ற மாதவிடாய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்.இதையடுத்து தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் காலை நேரத்தில் இந்த பானத்தை தயார் செய்து குடித்து வந்தால் அவை விரைவில் குணமாகும்.