இந்த ஒரு கிளாஸ் போதும்!! கிட்னி ஸ்டோன் ஆபத்து இல்லாமல் ஈஸியா வெளியேறும்!!
சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி, எரிச்சல், இடையிடையே சிறுநீர் கழித்தல், மஞ்சள் சிறுநீர் இவை அனைத்தையும் குணமாக்கும்.
சிறுநீர் கழிக்கும் போது பலருக்கு கடுமையான வலி அல்லது எரிச்சல் ஏற்படுகிறது. இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம், அதில் UTI மிகவும் முக்கியமானது.
இந்த பிரச்சனை வேறு பல தொற்றுகள் (சிறுநீர் தொற்று) காரணமாகவும் ஏற்படலாம். பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த பிரச்சனைகள் வரலாம். இருப்பினும் பெண்கள் தான் இதில் அதிகம் பாதிக்கப்படுவர்.
சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சலை ஏற்படுத்தும். பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக இந்த தொற்று ஏற்படலாம். அதன் அறிகுறிகளை சரியான நேரத்தில் அடையாளம் காண்பது முக்கியம். ஏனெனில் இந்த தொற்று அதிகரித்தால் சிக்கல்களை ஏற்படுத்தும். பிறப்புறுப்பில் அரிப்பு மற்றும் வெளியேற்றம் ஆகியவை அறிகுறிகளாக இருக்கலாம்.
சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகங்களில் கற்கள்:
சிறுநீர் கழிக்கும் போது வலியை ஏற்படுத்தும். சிறுநீரக கற்கள் இன்று மிகவும் பொதுவானவை. சிறுநீரக கற்களால், சில சமயங்களில் சிறுநீர் ஓட்டம் தடைப்பட்டு, இதன் காரணமாக சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும்.
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்(UTIs):
பெண்களின் பொதுவான பிரச்சனையாகும். சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் இரவில் சிறுநீர் கழிக்க அதிக ஆசை, சிறுநீரில் இரத்தம் ஆகியவை UTI பிரச்சனையின் அறிகுறிகளாகும்.
பாக்டீரியா சிறுநீர் பாதையில் உள்ள உறுப்புகளுக்குள் நுழையும் போது இந்த தொற்று ஏற்படுகிறது. மருந்துகளால் குணப்படுத்த முடியும், ஆனால் சுகாதாரத்தை கவனிப்பதும் மிகவும் முக்கியம்.எனவே இதனை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.
தேவையான பொருட்கள்:
மல்லி விதை
சீரகம்
எலுமிச்சை பழம்
செய்முறை:
1: முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் மல்லி விதையை எடுத்து உரலில் இடித்துக் கொள்ளவும். அதாவது அந்த விதை இரண்டாக உடையும்படி எடுத்துக் கொள்ளவும்.
2: பின்பு ஒரு கிளாஸில் தண்ணீரை எடுத்து அதில் நாம் இடித்து வைத்த மல்லி விதையை சேர்த்து ஒரு இரண்டு மணி நேரத்திற்கு நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.
3: அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நம் ஊற வைத்த மல்லி தண்ணியை சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் மற்றும் அறுத்து வைத்த எலுமிச்சை பழத்தை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பின்பு அதனை வடிகட்டி அதில் சுவைக்காக தேவையானால் தேன் சேர்த்துக்கலாம் அல்லது சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் இந்து உப்பை சேர்த்து குடிக்கலாம்.
இதனை நாம் மிதமான சூட்டில் தான் குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது மதியம் உணவு அரை மணி நேரத்திற்கு முன்பு இதனை குடிக்கலாம்.