5 நிமிடத்தில் உங்கள் உடல் சூட்டை குறைக்க இந்த ஒரு ஜூஸ் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!
நம் உடலில் உடல் சூடு என்பது பொதுவாக எப்பொழுதும் இருப்பதை விட கோடை காலங்களில் அதாவது வெயில் காலங்களில் மிக அதிகமாக இருக்கும். இதை சரிசெய்ய ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும் என்று சிலர் அந்த நடைமுறையை பின்பற்றுவார்கள்.
இப்படி செய்தாலும் உடல் சூடு குறையாது. உடல் சூடு அதிகமாக இருந்தால் நமக்கு சோர்வு ஏற்படுவது மட்டுமில்லாமல் சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை ஏற்படும். இந்த உடல் சூட்டை சரிசெய்ய சில ஜூஸ் வகைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடல் சூட்டை குறைக்க சில ஜூஸ்கள்
*நெல்லிக்காய் ஜூஸ்
*மாதுளை ஜூஸ்
*வெள்ளரி ஜூஸ்
நெல்லிக்காய் ஜூஸ்
இந்த நெல்லிக்காய் ஜூஸ் செய்ய முதலில் நெல்லிக்காய்களை கட் செய்து மிக்சியில் போட்டு அறைத்து அதன் சாறை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். நெல்லிக்காய் சாறுடன் சிறிதளவு தேன், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் கலந்து இந்த ஜூஸை தினமும் குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உடல் சூடு குறையத் தொடங்கும்.
மாதுளை ஜூஸ்
மாதுளை ஜூஸ் செய்ய மாதுளை பழத்தின் நடுவே உள்ள சுளைகளை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும். இதன் சாறை மட்டும் எடுத்து அதனுடன் தேவையான அளவு பால், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து தினமும் குடிக்க வேண்டும். இதனை தினமும் செய்வதாலும் உடல் சூடு குறையும்.
வெள்ளரி ஜூஸ்
உடல் சூட்டை மட்டுமில்லாமல் கோடை வெப்பத்தை குறைக்கவும் வெள்ளரி ஜூஸ் சிறந்த ஒரு பானமாக இருக்கிறது. உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை அளிக்கும் வெள்ளரிக்காய் வெயில் காலங்களில் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பாதுகாப்பதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
இதில் விட்டமின் ஏ, பி, சி, கே, மாங்கனீசு, காப்பர், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் உள்ளது.
இந்த வெள்ளரிக்காய் ஜூஸ் செய்வதற்கு முதலில் வெள்ளரிக்காயை எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். தோல் உரித்த வெள்ளரிக்காயை கட் செய்து மிக்சியில் போட்டு அதனுடன் சிறிதளவு இஞ்சியை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த வெள்ளரி பேஸ்டில் இருந்து சாற்றை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், சீரகப் பொடி ஆகியவற்றை கலந்து கொண்டு இந்த ஜூஸை குடிக்கலாம். இந்த ஜூஸை வரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை குடிக்க வேண்டும்.
இது மட்டுமில்லாமல் தண்ணீரை மிக அதிகமாக குடிக்க வேண்டும். இளநீரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.
உடல் சூட்டை தணிக்க காலையில் ஒரு முறை பிறகு மாலையில் ஒரு முறை என இரண்டு முறை குளிக்க வேண்டும். மேலும் சத்தான உணவுப் பொருள்களை சாப்பிட வேண்டும்.