சர்க்கரை நோயை மல மலவென குறைக்க இந்த ஒரு பொருள் போதும்!!
இன்றய காலகட்டத்தில் அதிகமாக இருக்கும் நோய் பிரச்சனைகளில் சர்க்கரை நோய் முதல் இடத்தை பிடித்துள்ளது. நம் வீட்டில் கண்டீப்பாக ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கும். 35 வயதை கடந்த அனைவருக்கும் நமக்கு சரக்கரை நோய் வந்துவிடும் என்ற அச்சம் அதிக அளவில் உள்ளது. இந்த அச்சமே சர்க்கரை நோய் ஏற்பட வழிவகுக்கின்றது.
நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவுகள், வாழ்க்கை முறையின் மாற்றங்கள் ஆகியவை சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கும்போது இந்தியாவில் மட்டும் இந்த சர்க்கரை நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது தெரிய வந்துள்ளது.
சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்னு உணவு பழக்கம். அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு கவனமாக இல்லையெனில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து கொலஸ்டரால், இதயநேய், இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் வேண்டும் என்றால் சில மாவு வகைகளையும் உணவாக செய்து அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சில மாவு வகைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தினை மாவு
அதிக அளவில் தேவையான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள சிறுதானியங்களில் தினையும் ஒன்று. தினையில் மாங்கனீசு நிறைந்துள்ளது. இதன் மூலம் குளுக்கோனோஜெனசிஸ் செயல்முறையின் மூலமாக சர்க்கரை அளவை கட்டுப்படுத்த தினை உதவுகிறது.
உங்களுக்கு நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் இருந்தால் உங்கள் உணவில் தினை மாவையும் சேர்த்து கொள்ள வேண்டும். தினை மாவு சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் சர்க்கரை நோய் ஏற்படுவதை தடுக்கவும் உதவுகின்றது.
ராகி மாவு
அதிக அளவு ஆரோக்கியம் உள்ள சிறுதானியங்களில் ராகியும் ஒன்று. இந்த ராகியை மாவாக பொடித்து பயன்படுத்துவது உடலுக்கு மிகவும் நல்லது. இந்த ராகி மாவில் பாலிஃபீனால்கள், அமினோ அமிலங்கள், உணவு நார்ச்சத்துக்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளது. ராகி மாவில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது. இதனால் இந்த ராகி மாவு முழுக்க முழுக்க நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதிக அளவு நன்மை விளைவிக்கும் உணவு மாவாக உள்ளது.
ராகியானது பசி எடுக்கும் உணர்வை குறைக்கச் செய்வதால் நம்மால் அதிக அளவு சாப்பிடாமல் இருக்க முடியும். இதனால் இரைப்பை காலியாக்கும் நேரத்தை குறத்து விடுகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
கொண்டைக்கடலை மாவு
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இது பொதுவான மாவு மாற்றாகும். கொண்டைக்கடலை மாவில் புரதச் சத்து அதிக அளவில் உள்ளது. இதனால் கொண்டைக்கடலை மாவு இன்சுலின்.அதிர்ப்பை தடுக்கிறது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைவரும் கொண்டைக்கடலை மாவை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கோதுமை மாவு
கோதுமை மாவில் கரையக்கூடிய ஃபைப்பர் பீட்டா குளுக்கன் உள்ளது. இதனால் நார்சத்துக்கு தேவையான ஆதாரமாக கோதுமை மாவு விளங்குகின்றது. இது செரிமான மண்டலத்தில் சர்க்கரையுடன் பிணைப்பதால் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றது.
அது மட்டுமில்லாமல் கோதுமை மாவிலும் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளதால் இது ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கின்றது. இதனால் தான் சர்க்கரை நோய் உள்ள அனைவரும் கோதுமை மாவை உணவாக பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
பாதாம் மாவு
நன்றாக அரைக்கப்பட்ட பாதாமிலிருந்து தயாரிக்கப்படும் பாதாம் மாவு வழக்கமான மாவுக்கு பசையம் இல்லாத மாற்றாகும். பாதாம் மாவில் குறைந்த கார்போஹைரேட்டுகள், நார்ச்சத்துக்கள், இதயத்துக்கு தேவையான கொழுப்புகள், புரதம் அகியவை உள்ளது. பாதாம் மாவிலும் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளதால் இதுவும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.