இது ஒன்று போதும் வாத நீர் கட்டு கால் வீக்கம் முழங்கால் வீக்கம் அனைத்தும் உடனடியாக சரியாகிவிடும்!!

0
332

இது ஒன்று போதும் வாத நீர் கட்டு கால் வீக்கம் முழங்கால் வீக்கம் அனைத்தும் உடனடியாக சரியாகிவிடும்!!

நமது உடலில் வாதம், பித்தம் கபம் என்ற மூன்றும் சமநிலையில் இருந்தாலே நமது உடல் நன்றாக வேலை செய்யும். இதில் ஏதேனும் ஒன்று சரியாக இல்லாவிட்டால் நமது உடலில் உடல் சோர்வு உடல் வலி பாதம் மற்றும் கால்களில் நீர் கோர்த்தல் வலி வீக்கம் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வாதநீர் என்று சொல்ல கூடிய கெட்ட நீர் உடம்பில் அதிகமாக தங்கி இருப்பது தான். இந்த வாத நீரை சரி செய்யக்கூடிய ஒரு அருமையான தேநீரை வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எப்படி செய்யலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பெருஞ்சீரகம்
மிளகு
புதினா

செய்முறை:
இந்த தேநீரை செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி அளவு சோம்பு மற்றும் இரண்டு மிளகு சேர்த்து இதனுடன் ஒரு கிளாஸ் அளவு தண்ணீரை ஊற்றி பிறகு இரண்டு மூன்று புதினா இலைகளை போட்டு நிறம் மாறும் வரை அடுப்பில் நன்றாக கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இந்த தேனீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் சிறப்பு இதைக் குடித்துவிட்டு அரை மணி நேரம் கழித்து காபி டீ முதலியவற்றை குடித்து வரலாம். இதே போல் மாலை நேரங்களிலும் நான்கு அல்லது ஐந்து மணிக்கு இதை குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து குடித்து வர பாதங்களில் இருக்கக்கூடிய வாத நீர் பாத எரிச்சல் பாத வீக்கம் முழங்கால் வீக்கம் முழங்கால் வலி மூட்டுகளில் இருக்கக்கூடிய வாத நீர் என அனைத்தும் சரியாகிவிடும்.

மேலும் இந்த தேநீரை தாராளமாக ஒன்றரை மாதங்களுக்கு தொடர்ந்து குடித்து வரலாம். வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் குடித்து வரலாம் இவ்வாறு செய்வதனால் உடம்பில் இருக்கக்கூடிய வாத நீர் கட்டுக்கள் நீர் கோர்த்தல் முழங்கால் வீக்கம் வலி எரிச்சல் என அனைத்துமே மாயமாகி மறைந்து விடும்.

அடுத்ததாக மூட்டுகளில் வாதநீர் மூட்டுகளில் வீக்கம் வலி என்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் சிறிதளவு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு நன்றாக மிக்ஸியில் அரைத்து மூட்டுகளில் தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும் இவ்வாறு செய்வதனால் மூட்டுகளில் இருக்கக்கூடிய வாதநீர் வலி வீக்கம் என்று அனைத்தும் உடனடியாக குணமாகிவிடும்.

மேலும் இதில் சேர்க்கப்பட்டிருக்கக்கூடிய சோம்பு வாத நீர் கோர்த்தலை கரைத்து வெளியேற்றும் சக்தி வாய்ந்தது மேலும் இதில் மெக்னீசியம் கால்சியம் பாஸ்பரஸ் வைட்டமின் ஏ என்று பல சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனுடன் சேர்த்து இருக்கக் கூடிய புதினா இலையானது நம் உடம்பில் இயற்கையாக ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பு செய்வதோடு மட்டுமல்லாமல் வாயு மலச்சிக்கல் செரிமான கோளாறு என அனைத்தையும் நீக்கும்.

author avatar
CineDesk