சைனஸ் உங்களை தொந்தரவு செய்கின்றதா?? உங்களுக்கான நிரந்தர தீர்வு!!

0
35

சைனஸ் உங்களை தொந்தரவு செய்கின்றதா?? உங்களுக்கான நிரந்தர தீர்வு!!

சைனஸ் நோயை குணமாக்க டிப்ஸ்.

சைனஸ் என்றால் நம் முகத்தில் மேல் பகுதிகளில் சுற்றிலும் நாலு ஜோடி காற்று பையாக இருக்கிறது. இந்த அறைகள்தான் நாம் சைனஸ் என்கிறோம்.

இந்தப் பகுதிகள் தான் பாக்டீரியா வைரஸ் போன்ற தொற்றுகள் மற்றும் வேறொரு பிரச்சினைகளால் நீர் கோர்த்து சளி திறன் சேரும் இதன் காரணங்களால் பல்வேறு விதங்களால் நிறைய பேர் அவதிப்படுவார்கள்.

இதன் விளைவாக சளி, இரும்பல், ஜலதோஷம், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொடர் தும்மல், முகம் பாரமாக இருப்பது, முகத்தை சுற்றி வீக்கம், தலைவலி இது போன்ற பல பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இந்த அறிகுறிகள் இருப்பதென்றால் சைனஸ் சிட்டிஸ் என்று சொல்கிறோம்.

பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கம்மியாக இருப்பவர்களுக்கும் உடல் உஷ்ணம் இருப்பவர்களுக்கும் அடிக்கடி அலர்ஜி சார்ந்த பிரச்சனைகள் அதிகமாக இருப்பவர்கள் தான் சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுவார்கள்.

மாதக் கணக்கில் சைனஸ் பிரச்சினைகளால் அவதிப்படுவர்களுக்கு வீட்டில் இருக்கக்கூடிய மருத்துவ குணத்தை பார்க்கலாம்.

1: ஆவி பிடித்தல்:

வெந்நீரை எடுத்து அதில் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து நன்றாக ஆவி பிடித்தல் வேண்டும். இப்படி செய்தால் சளி, இரும்பல், மூக்கில் தண்ணி வடிதல் இதுபோன்ற பிரச்சனைகள் நீங்கிவிடும். யூகலிப்டஸ் இல் உள்ள பாக்டரியல் பண்புகள் சைனஸ் பிரச்சினைகளை நீக்கி விடும். ஆவி பிடித்தலை ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்தால் நல்லது.

2: ஜலநெட்டி:

பொதுவாவே சைனஸ் சிட்டிஸ் பார்த்தீங்கன்னா சைனஸ் ஏரியாவில் இருக்கக்கூடிய வைரஸ் கிருமிகள் பெருக்கத்தின் காரணமாக தான் சைனஸ் சிட்டிஸ் பிரச்சனைகள் அனைவரும் அவஸ்தை படுகிறார்கள். அப்படி இருப்பவர்களுக்குத்தான் ஜலனெட்டி பயன்படுகிறது. நெட்டி பாட் சொல்லக்கூடிய ஒரு கப்பு அது கடைகளில் இருக்கிறது அதில் வெதுவெதுப்பான சூட்டில் தண்ணீர் எடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அந்த நெட்டிப்பாட்டில் சேர்த்து உட்கார்ந்து தலையை ஒரு பக்கமாக சாய்த்து அதனை பயன்படுத்த வேண்டும். அது ஒரு பக்கமா இருந்து மறுபக்கம் தண்ணீர் வெளியே வரும். அப்படி செய்தால் சைனஸ் பிரச்சனைகள் நீங்கிவிடும். சைனஸில் உள்ள இன்ஃபர்மேஷனையும் குறைத்து சைனஸ் பிரச்சினைகளிலிருந்து இந்த பயிற்சி வெளியேற்றும்.

3: ஆயில் பாத்:

சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் முக்கியமாக அவர்களுக்கு உடல் சூடு இருக்கும். உடல் சூடு அதிகம் இருப்பவர்கள் தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அல்லது நல்லெண்ணெய் கூட நொச்சி இலை சேர்த்து நன்றாக காய்ச்சி அதனை தலையில் தேய்த்து குளித்து வர வேண்டும். இப்படி செய்தால் சைனஸ் பிரச்சனை நீங்கிவிடும் மற்றும் உடலில் உள்ள அஜீரணம், சளி தொல்லை போன்ற பிரச்சினைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

4: அலர்ஜி:

ஒவ்வொரு விதமான அலர்ஜிகள் ஏற்படும் சிலருக்கு காற்று தூசி மாசு கட்டுப்பாடு போன்று இருப்பதனால் அவர்களுக்கு அலர்ஜி ஏற்படும். பேருக்கு வீட்டில் சமைக்கும் பொழுது தாளிப்பதனால் அவர்களுக்கு அலர்ஜி ஏற்படும். சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் எது மாதிரி அலர்ஜி இருப்பதனை கண்டு அவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

5: சளியினால் ஏற்படும் உணவுகள்:

குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. ஜங்க் ஃபுட்ஸ் தவிர்க்கணும். அதிக காரமான உணர்வுகளை தவிர்க்க வேண்டும். இதுபோன்று உணவுகள் சாப்பிட்டால் சளி ஏற்படும் அதனால் சைனஸ் பிரச்சினை வரும்.

இது போன்ற முறைகளை நாம் பயன்படுத்தினால் சைனஸ் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் நாம் ஆரோக்கியமாகவும் நலமாகவும் இருக்கலாம்.

author avatar
Parthipan K