குப்பைமேட்டில் வளர்ந்து கிடக்கும் இந்த செடி.. புகை பழக்கத்திற்கு ஒரே நாளில் தீர்வு தரும்!!

Photo of author

By Divya

குப்பைமேட்டில் வளர்ந்து கிடக்கும் இந்த செடி.. புகை பழக்கத்திற்கு ஒரே நாளில் தீர்வு தரும்!!

Divya

This plant growing in garbage dump.. will solve smoking habit in one day!!

குப்பைமேட்டில் வளர்ந்து கிடக்கும் இந்த செடி.. புகை பழக்கத்திற்கு ஒரே நாளில் தீர்வு தரும்!!

உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்கங்களில் ஒன்று புகைப்பழக்கம்.இந்த புகை பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு உண்டாக அதிக வாய்ப்பு இருக்கிறது.எனவே இந்த புகைப்பழக்கத்தை நிறுத்த இந்த வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து ஒரு மாத காலம் பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தீர்வு 01:-

சூரியகாந்தி விதை

தினமும் ஒரு தேக்கரண்டி சூரியகாந்தி விதையை மென்று சாப்பிட்டு வந்தால் புகைப்பழக்கத்திற்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

தீர்வு 02:-

குப்பைமேனி இலை
மிளகு

50 கிராம் குப்பைமேனி இலையை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு 4 அல்லது 5 மிளகை இடித்து குப்பைமேனி சாற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் புகைப்பழத்திற்கு தீர்வு கிடைக்கும்.

தீர்வு 03:-

உலர் திராட்சை

ஒரு கிண்ணத்தில் 10 உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற விடவும்.மறுநாள் ஊற வைத்த திராட்சையை சாப்பிடவும்.இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புகை பழக்கத்திற்கு தீர்வு கிடைக்கும்.

தீர்வு 04:-

அன்னாசி பழ துண்டுகள்
அன்னாசி இலை
சீரகம்
மிளகு
கோதுமை
இந்துப்பு

ஒரு கிண்ணத்தில் 25 கிராம் கோதுமை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற விடவும்.மறுநாள் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கோதுமை ஊற வைத்த நீரை சேர்த்து மைய அரைக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.

பின்னர் ஒரு கப் அளவு அன்னாசி பழ துண்டுகள் எடுத்துக் கொள்ளவும்.பிறகு அன்னாசி பழத்தில் உள்ள கொழுந்து இலைகள் இரண்டு அல்லது மூன்று எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு நறுக்கிய அன்னாசி பழ துண்டுகள்,இலைகள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் 5 மிளகு மற்றும் சிட்டிகை அளவு உப்பு சேர்க்கவும்.அதன் பின்னர் அரைத்த கோதுமை பாலை அதில் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பிறகு இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.அதன் பிறகு இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு ஊற்றி அருந்தி வந்தால் புகைப்பழக்கத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.