எங்கள் அணிக்கு புதிய பலத்தை சேர்ப்பவர் இந்த வீரர்தான் – தினேஷ் கார்த்திக்

Photo of author

By Parthipan K

இந்தியாவில் கோடை விடுமுறையில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் இந்த தொடரை நடத்த முடியாத சூழ்நிலை காரணமாக போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்றுவிட்டனர். கொல்கத்தா அணியின் கேப்டனான தினேஷ் கார்த்திக் பேசும்போது இந்த வருடம் ஐபிஎல் தொடர் ஏகப்பட்ட பிரச்சனைகளை கடந்து நடக்க இருக்கிறது.

எங்கள் அணியின் தொடக்க வீரரான  கிறிஸ் லின் கடந்த சில ஆண்டுகளாக அதிரடியான துவக்கத்தை கொடுத்து வந்தார். அவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் பல போட்டிகளில் அவர் கொல்கத்தா அணிக்காக சிறப்பான துவக்கத்தை அளித்துள்ள அவரை வேறு வழியில்லாமல் தான் விடுவித்து உள்ளோம் அவரின் ஆட்டம் பார்ப்பதற்கு  மிகவும் அருமையாக இருக்கும் அவர் ஒரு சிறந்த வீரர் அவரை இழந்தாலும் இங்கிலாந்து கேப்டனான மார்கன் எங்கள் அணிக்கு ஒரு புது பலத்தை சேர்ப்பார் என்று கூறினார்.