எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் விரட்ட இந்த ஒற்றை கசாயம் போதும்.. உடனே ட்ரை பண்ணுங்க!!
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்,காலநிலை மாற்றம்,வைரஸ் தொற்று போன்ற காரணங்களால் காய்ச்சல் உண்டாகிறது.இந்த பாதிப்பை மருந்து மாத்திரை இன்றி எளிமையாக குணமாக்கி கொள்வது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)வெற்றிலை – இரண்டு
2)துளசி இலை – பத்து
3)கற்பூரவல்லி – இரண்டு
4)இஞ்சி – ஒரு துண்டு
5)பனைவெல்லம் – தேவையான அளவு
6)வேப்பிலை – நான்கு
7)ஓமம் – அரை தேக்கரண்டி
8)மிளகு – ஐந்து
9)சீரகம் – கால் தேக்கரண்டி
10)தண்ணீர்
செய்முறை:-
முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஐந்து மிளகு மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து மிதமான தீயில் வறுத்து ஆறவிட்டு அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் இரண்டு வெற்றிலையை காம்பு நீக்கி கிள்ளி அதில் நீரில் போடவும்.
பிறகு இடித்த மிளகு,சீரகம் மற்றும் ஓமத்தை சேர்த்து சூடாக்கவும்.அதன் பின்னர் இரண்டு கற்பூரவல்லி இலை,பத்து துளசி இலை மற்றும் நான்கு வேப்பிலை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
அதன் பின்னர் சுவைக்காக சிறிது பனைவெல்லம் சேர்த்து கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த கசாயத்தை வடிகட்டி குடித்தால் காய்ச்சல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.
மற்றொரு எளிய தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)துளசி – கால் கப்
2)இஞ்சி – ஒரு துண்டு
3)தேன் – இரண்டு தேக்கரண்டி
செய்முறை:-
ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.அதன் பின்னர் கால் கப் துளசி இலைகளை நீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் துளசி இலைகள் மற்றும் இஞ்சி துண்டுகளை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.இந்த சாற்றை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் காய்ச்சல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.