தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டனிலிருந்து விலகிய முக்கிய வீராங்கனை

0
164

டென்மார்க்கில் நாளை முதல் தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் தொடங்குகிறது.  இப்போட்டியில் இருந்து நடப்பு உலக சாம்பியன் பி.வி.சிந்து விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இப்போட்டியில் இருந்து விலகியதாக அவரது தந்தை பி.வி.ரமணா கூறி உள்ளார். ‘ஐதராபாத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் எங்களுக்கு முக்கியமான வேலை உள்ளது. பூஜைகள் செய்ய வேண்டியிருப்பதால், இதில் சிந்து கட்டாயம் பங்கேற்க வேண்டி உள்ளது. எனவே, அவர் தாமஸ், உபேர் கோப்பை போட்டியில் இருந்து விலகினார்’ என்று ரமணா  மேலும் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும்போது கொரோனா பிரச்சினை பற்றி எந்த கவலையும் இல்லை தாமஸ் உபேர் கோப்பை தொடருக்கு பிறகு நிலைமை முற்றிலும் சரியானால், மற்ற போட்டிகளிலும் பங்கேற்பது பற்றி சிந்து முடிவு செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

Previous articleசரிந்தது தங்கத்தின் விலை! மக்களே தங்கம் வாங்க தயாராக இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
Next articleஐ.பி.எல். தொடருக்கு முன் இந்த போட்டியில் விளையாட விரும்பும் வீரர்கள்