இனி உணவகத்தில் சாப்பிடுபவர்கள் உஷார்!! சிக்கனுக்கு பதில் எலி பிரபல உணவகத்தில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!!

Photo of author

By Jeevitha

இனி உணவகத்தில் சாப்பிடுபவர்கள் உஷார்!! சிக்கனுக்கு பதில் எலி பிரபல உணவகத்தில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!!

Jeevitha

Those who eat in the restaurant, beware!! A shocking incident happened in a famous restaurant where a rat instead of chicken!!

இனி உணவகத்தில் சாப்பிடுபவர்கள் உஷார்!! சிக்கனுக்கு பதில் எலி பிரபல உணவகத்தில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியா அளவில் வீட்டில் சாப்பாடு சாப்பிடுபவர்கள் எண்ணிக்கையை விட ஹோட்டலில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை தான்  அதிகமாக இருக்கிறது. இது போன்ற  சூழல்கள் உள்ள நிலையில் பல உணவு நிறுவனங்கள் அதிக லாபத்திற்காக மலிவான உணவு பொருட்களை உணவகத்தில் சமைத்து வருகிறார்கள்.

இன்னும் சிலர் உணவகத்தில் உணவு பொருட்களை மாற்றியும், பழைய பொருட்களையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தும்  வருகிறார்கள்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் ஒருவர் சாப்பிட சென்றுள்ளார் . அவர் சிக்கன் கிரேவி ஆடர் செய்துள்ளார் சாப்பிட தொடங்கும் முன் சிக்கன் கிரேவியில் எலி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து அவர் அந்த உணவக பணியாளர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் பணியாளர்கள் சரியான பதில் எதும் அளிக்கவில்லை.

அதனை தொடர்ந்து அவர்  ஒரு வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  அதில் சகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த சம்பவத்தில்  எங்கள் உணவகத்தில் தவறு நடக்கவில்லை என்றும்,  இந்த பொய் பதிவு, எங்கள் உணவகத்தின் பெயரை கெடுக்க இவ்வாறு  நடப்பதாகவும்  அந்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து  அந்த உணவகத்தில் உணவு சாப்பிட்ட நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்கள். இதனால்  அந்த உணவக உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.