கொசு கடித்து கை கால்களில் தடிப்பு உள்ளவர்கள் உடனே வீட்டிலிருக்கும் இந்த பொருளை யூஸ் பண்ணுங்க!! 

மழைகாலம் தொடங்கி விட்டாலே கொசுக்களின் உற்பத்தி அதிகமாகிவிடும்.இந்த கொசுக்கள் கடிப்பதால் டெங்கு,மலேரியா,ஜிகா போன்ற வைரஸ் தொற்றுகள் ஏற்பட்டு உயிரை குடித்துவிடும்.ஒவ்வொரு ஆண்டும் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களால் லட்சக்கணக்கான உயிரிகள் இறக்கின்றன.

நமது தமிழகத்தில் ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை கொசுக்களின் பரவல் அதிகமாக இருக்கும்.இந்த காலகட்டத்தில் கொசுக்கள் மூலம் பல்வேறு நோய்கள் பரவுகின்றன.சிலருக்கு கொசு கடித்தால் சரும அலர்ஜி ஏற்படும்.

கொசுக்கடித்தால் தலைவலி,காய்ச்சல்,தசை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும்.சிலருக்கு கொப்பளம்,தடிப்பு,அரிப்பு,எரிச்சல் போன்ற சரும அலர்ஜி உண்டாகும்.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை செய்து வரலாம்.

1)பேக்கிங் சோடா
2)தண்ணீர்

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்யவும்.இதை கொசு கடித்த இடத்தில் பூசினால் சரும அலர்ஜி சரியாகும்.

1)தேன்

கொசு கடித்த இடத்தில் தேன் தடவினால் சரும அலர்ஜி ஏற்படலாம் இருக்கும்.தேன் ஆன்ட்டி பாக்டீரியலாக செயல்பட்டு சருமத்தை பாதுகாக்கிறது.

1)கற்றாழை ஜெல்

மருத்துவ குணங்கள் நிறைந்த கற்றாழை சரும அலர்ஜியை போக்க உதவுகிறது.கொசுக்கள் கடிப்பதால் ஏற்படும் சரும அலர்ஜியை போக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம்.

1)எலுமிச்சை சாறு

கொசுக்கள் கடித்து அரிப்பும்,எரிச்சல் ஏற்பட்டால் எலுமிச்சை சாறை தடவி சரிசெய்யலாம்.அது மட்டுமின்றி கொசுக்கடியால் ஏற்படக் கூடிய தொற்றுக்களை சரி செய்ய உதவுகிறது.