இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயின் பக்கமே போகாதீங்க!!எச்சரிக்கை அலட்சியம் காட்டினால் உயிருக்கே ஆபத்து!!

0
133

இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயின் பக்கமே போகாதீங்க!!எச்சரிக்கை அலட்சியம் காட்டினால் உயிருக்கே ஆபத்து!!

நெல்லிக்காயில் பலவித சத்துக்கள் உள்ளது என சொல்லப்பட்டுள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தலைமுடி மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும்.

இதில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பது நமக்கு தெரியும். ஆனால் நெல்லிக்காயில் இருக்கும் பக்க விளைவுகள் குறித்தும் இதை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது குறித்தும் இந்த பதிவில் பார்ப்போம்.

** கல்லீரல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்களுக்கு நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். கல்லீரல் பிரச்சனை மற்றும் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பிறகு நெல்லிக்காய் ஜூஸ் பருகலாம்.

** அதேபோல் சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க கூடாது என்று சொல்லப்பட்டு வருகிறது. ஏனெனில் சிறுநீரை இயற்கையாகவே அதிகரிக்கும் பண்புகள் நெல்லிக்காயில் உள்ளது. மேலும் இதில் உள்ள பொருட்கள் சிறுநீரக நோயாளிகளின் உடல் திசுக்களை சேதப்படுத்துகின்றன என தெரியவந்துள்ளது.

** லோ பிபி அதாவது குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க கூடாது. ஏனெனில் நெல்லிக்காயில் இயற்கையாகவே ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை உள்ளது.

** கர்ப்பிணி பெண்கள் நெல்லிக்காய் ஜூஸை குடித்தால் பலவிதமான அஜீரண பிரச்சனைகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

எனவே மேற்கண்ட பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயை சாப்பிட்டாலும் அல்லது ஜூசாக குடித்தாலோ பிரச்சனை ஏற்படும் என்பதால் அதை அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

Previous articleஇளைஞர்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! உங்களுக்கான சூப்பரான வேலை இதோ!!
Next articleசாப்பிட்டபின் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாமா?? அதில் இவ்வளவு உள்ளதா???