சாப்பிட்டபின் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாமா?? அதில் இவ்வளவு உள்ளதா??? 

0
87

சாப்பிட்டபின் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாமா?? அதில் இவ்வளவு உள்ளதா??? 

உணவு உட்கொண்ட பின்னர் சிறிது நடை பயிற்சி மேற்கொள்வது உடல் நலத்துக்கு நல்லது என்ற கருத்து பொதுவாக முன்வைக்கப்படுகிறது. இந்த பழக்கமானது பழங்காலம் முதலே உலகெங்கும் பின்பற்றப்பட்டு வருகிறது.

சாப்பிட்டதும் நிதானமாக உலாவுவது பல ஆரோக்கிய நன்மைகளை விளைவிக்கும். அத்தகைய நடைபயிற்சியை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்களை பார்ப்போம்.

*** உணவு உண்ட பின்னர் நிதானமாக நடை பயிற்சி மேற்கொள்வது உடலின் செரிமான அமைப்புகளின் செயல்பாடுகளை தூண்டி விட உதவும். குறிப்பாக செரிமான பாதைக்கு இடையூறாக இருப்பனவற்றை நிவர்த்தி செய்து உணவு தடையின்றி செரிமானமாக ஊக்குவிக்கும்.

*** நடக்கும் பொழுது செரிமான செயல்பாடுகள் சுமுகமாக நடைபெறுவதால் உணவில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் உடல் உறிஞ்சும் செயல் முறையும் சீராக நடைபெறும். உணவு உண்டபின் சிறிது தூரம் நடப்பதன் மூலம் அஜீரண கோளாறு, வயிற்று உப்புசம் போன்ற அசௌகரியங்களை தவிர்க்கலாம்.

*** ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவதில் உணவுக்குப் பிந்தைய நடை பயிற்சி உதவுகிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதொரு பலனை கொடுக்கும். இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க செய்து குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்திலும், அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கும். இதன் காரணமாக ரத்த சர்க்கரையில் ஏற்படும் திடீர் மாற்றம் கட்டுப்படுத்தப்படும்.

*** உணவுக்கு பிந்திய உடற்பயிற்சி உடல் இயக்கங்களை தூண்டி வளர்ச்சிதை மாற்றங்களை ஊக்குவிக்கும். இந்த மென்மையான உடற்பயிற்சி கலோரிகள் அதிகமாக எரிக்கப்படுவதற்கு தூண்டுதலாக அமையும். மேலும் உடல் எடையை சீராக பேணுவதற்கும் இந்த உடற்பயிற்சி உதவுகிறது.

*** சாப்பிட்ட பின் நடப்பது எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டும். நல்ல ஹார்மோன்கள் என அழைக்கப்படும் இது மன அழுத்தத்தை திறம்பட குறைக்கும் ஆற்றல் கொண்டது. மனநிலையையும் விரைவாக மேம்படுத்தக் கூடியது. மேலும் உணவு உண்ட பின் நடைபெற்று மேற்கொள்வது சோர்வை நீக்கி புத்துணர்வை பெற உதவும்.