லியோ சிறப்பு காட்சிக்கான டிக்கெட் விற்பனை!!! உண்மையை கூறிய தியேட்டர் நிர்வாகம்!!!

0
197
#image_title

லியோ சிறப்பு காட்சிக்கான டிக்கெட் விற்பனை!!! உண்மையை கூறிய தியேட்டர் நிர்வாகம்!!!

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுவது போலியானது என்று மதுரையில் உள்ள சினிப்பிரியா தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் இந்த மாதம் அதாவது அக்டோபர் 19ம் தேதி உலகளவில் பேன் இந்தியா தியைப்படமாக வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் புரொமோசன் வேலைகளில் ஈடுபட்டுள்ள படக்குழு லியோ திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை அள்ளித் தந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் லியோ திரைப்படம் ஒரு நாள் முன்னரே அதாவது அக்டோபர் 18ம் தேதியே சிறப்புக் காட்சியாக வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை வைத்து அக்டோபர் 18ம் தேதி லியோ சிறப்பு காட்சிக்கான டிக்கெட் விற்பனையாகின்றது என்று இணையத்தில் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

அந்த டிக்கெட்டில் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 18ம் தேதி மாலை 6.30 மணிக்கு திரையடப்படும் என்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள சினிப்பிரியா திரையரங்கத்தில் சிறப்பு காட்சியாக லியோ திரைப்படம் வெளியாவதற்கு என்றும் இருந்தது. இதை மறுத்த சினிப்பிரியா தியேட்டர் நிர்வாகம் அது போலியான டிக்கெட் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சினிப்பிரியா தியேட்டர் நிர்வாகம் சமூக வலைதளத்தில் பக்கத்தில் “அன்புள்ள விஜய் ரசிகர்களே சமீப நாட்களில் போலி டிக்கெட் விற்பனை குறித்து எங்களுக்கு அறிவிக்கப்பட்டது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே இது. எனவே அந்த ப்ராக்ஸி(போலி) டிக்கெட்டுகளுக்கு எங்கள் சினிப்ரியா நிர்வாகம் பொறுப்பேற்காது என்பதால், அந்த ப்ராக்ஸி(போலி) டிக்கெட்டுகளை வாங்க வேண்டாம் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி! அன்புடன், சினிப்ரியா வளாகம்” என்று பதிவிட்டுள்ளது.

எனவே போலியான டிக்கெட்டுகளை வாங்கி யாரும் ஏமாற வேண்டாம். மேலும் லியோ திரைப்படம் குறித்து போலியான டிக்கெட்டுகளை சமூகவலைதளங்களில் வெளியிடுபவர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும் இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

Previous articleநெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! அரசு பேருந்துகளில் இன்று முதல் முன் பதிவு தொடக்கம்!!!
Next articleகேளுங்க மக்களே.. இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்!! கண்டிப்பா வாங்கிடுங்க!!