கேளுங்க மக்களே.. இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்!! கண்டிப்பா வாங்கிடுங்க!!

0
28
#image_title

கேளுங்க மக்களே.. இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்!! கண்டிப்பா வாங்கிடுங்க!!

நம் நாட்டில் ஏழை,எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்வதில் நியாயவிலை கடை பொருட்களுக்கு முக்கிய இடம் இருக்கிறது.மாதம் ஒருமுறை ரேஷனில் வழங்கப்படும் அரசி,கோதுமை,துவரம் பருப்பு,சர்க்கரை,பாமாயில் உள்ளிட்டவை சாமானிய மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.கடைடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலையை விட நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்க பெறுவதால் இந்த திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கிறது.

நாட்டு மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றுள்ள இந்த திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வருகிறது.நியாயவிலை கடைகளில் கிடைக்கும் இந்த மலிவான பொருட்களை PHH,NPHH,PHH – AAY உள்ளிட்டரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும்.NPHH – S அட்டை வைத்திருப்பவர்கள் சர்க்கரை மட்டும் பெற்றுக் கொள்ள முடியம்.

தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் அரசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படும் நிலையில் 1 கிலோ சர்க்கரை 13 ரூபாய்க்கும்,1 கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும்,1 லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கூடுதலாக 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 லிட்டர் பாமாயில் இலவசமாக வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் புது தகவல் ஒன்றை அமைச்சர் சக்கரபாணி சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.

அதாவது தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் விரைவில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.இது தென்னை விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வரும் நிலையில் அமைச்சரின் இந்த தகவல் விவசாய பெருமக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நியாயவிலை கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகிக்கும் திட்டத்தை முதலில் நீலகிரி,தென்காசி,கன்னியாகுமரி,கோவை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு அறிமுகப் படுத்த உள்ளதாகவும் அவர்கள் கொடுக்கும் வரவேற்ப்பை பொறுத்து தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாவட்டங்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்து இருப்பதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு ஒருபுறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் மக்களிடையே சில குழப்பங்களையும் ஏற்பட்டு இருக்கிறது.ஒருவேளை தேங்காய் எண்ணெய் விநியோகத்தை அரசு மேற்கொண்டால் பாமாயில் விநியோகம் நிறுத்தப்பட்டு விடுமோ? என்ற குழப்பம் மக்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது.